ஆண்மை தவறேல் – 11

(Latest Tamil Sex Stories - Aanmai Thavarael 11)

Raja 2013-11-21 Comments

Latest Tamil Sex Stories – அத்தியாயம் 9

அடுத்த நாள்..

அடையாறில் இருந்து திருவான்மியூர் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது அந்த ரெஸ்டாரன்ட். கருப்பு கண்ணாடி போர்த்தப்பட்ட உட்பகுதி முழுதும் ஏஸி செய்யப்பட்டிருக்க, வெளியில் இருந்த சிறிய பகுதியில் பச்சை நிறத்தில் பெயர் தெரியாத செடி கொடிகளை வளர்த்து, அந்த செடி கொடிகளுக்கு இடையில் ஆங்காங்கே பிரம்பு நாற்காலிகளையும் மேஜைகளையும் சீராக போட்டு வைத்து, கார்டன் ரெஸ்டாரன்ட் என்று பெயரிட்டிருந்தார்கள். அந்த நண்பகல் நேரத்தில் ரெஸ்டாரண்டில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது.

ஒரு மூலையில் கிடந்த பிரம்பு நாற்காலியில் நந்தினி அமர்ந்திருந்தாள். மேஜை மீதிருந்த அந்த சிறிய கண்ணாடி உப்பு டப்பாவை கையில் எடுத்து, அதை கவிழ்ப்பதும், நிமிர்த்துவதும், கண்ணாடி சுவர்களில் உப்பு நகர்வதை வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தாள். ஒருமுறை மணிக்கட்டை திருப்பி மணி பார்த்தாள். அசோக் வருவதாக சொன்ன நேரம் சென்று அரை மணி நேரம் ஆகியிருந்தது. வேண்டுமென்றே தன்னை காக்க வைக்கிறானோ என்று அவளுடைய மனதுக்குள் ஒரு எண்ணம் ஓடியது. அப்புறம் மீண்டும் டப்பாவை கையில் எடுத்து விளையாட்டை ஆரம்பித்தாள். இந்தமுறை மிளகுப்பொடி டப்பா.

அதன்பிறகு ஒரு ஐந்து நிமிடங்கள் கழித்தே அசோக் அங்கே வந்தான். வெளிர்நீல நிற மேல்சட்டையும், அடர்நீல நிற காட்டன் பேண்ட்டும், கண்ணுக்கு கொடுக்கப்பட்ட குளிர் கண்ணாடியும், காதுக்கு கொடுக்கப்பட்ட செல்போனுமாக ஒரு புயல் வேகத்தில் அந்த கார்டனுக்குள் நுழைந்தான். அவனை பார்த்ததுமே நந்தினியின் உடலில் ஒரு உதறல் வந்து ஒட்டிக் கொண்டது. விளையாடிக்கொண்டிருந்த டப்பாவை அவசரமாய் கீழே வைத்துவிட்டு, நிமிர்ந்து அமர்ந்தாள். லேசாக மிடறு விழுங்கிக் கொண்டாள்.

அசோக் நந்தினியை ஏறிட்டு பார்க்கவே இல்லை. யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டே ஸ்டைலாக நடந்து வந்தவன், நேராக வந்து நந்தினிக்கு எதிரே கிடந்த சேரில் அமர்ந்து கொண்டான். நந்தினியை கண்டுகொள்ளாமலே, தொடர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தான். அவன் நடந்து வரும்போது அவனையே மிரட்சியாக பார்த்துக்கொண்டிருந்த நந்தினி, இப்போது தலையை கவிழ்த்துக் கொண்டாள். தலை கவிழ்ந்திருந்தாலும், அவளது கருவிழிகளை மட்டும் மேலே உயத்தி, ‘பர்சேஸ் ஆர்டர், பேமன்ட், இன்வாய்ஸ்’ என்று யாருடனோ சூடாக பேசிக் கொண்டிருந்த அசோக்கையே ஓரக்கண்ணால் நோட்டமிட்டாள்.
அவனை பார்க்க பார்க்க அவளுடைய மனதுக்குள் ஒரு ஆச்சரிய ஊற்று பீறிட்டு கிளம்பி, வெள்ளமென பொங்கி பெருகியது. ஆறு வருடங்களில் எவ்வளவு மாறி விட்டான் இவன்..? கல்லூரி படிக்கையில் அவன் முகத்தில் எப்போதும் மிளிரும் அந்த பெண்மையையும், மென்மையையும் இப்போது மைக்ராஸ்கோப் வைத்துதான் தேடவேண்டும் என்று தோன்றியது. ஸ்பெக்ஸ் அணியாத அவனது பார்வையில் இருந்த அந்த கூர்மையில்தான் எவ்வளவு வெப்பம்..? மூன்று நாட்களாய் மழிக்கப்படாமல் முள்முள்ளாய் இருந்த தாடியிலும், மூக்குக்கு கீழே அழகாய் ஓரம் நறுக்கப்பட்டு அவனது பாதி மேலுதட்டை கவ்வியிருந்த மீசையிலும்தான் எவ்வளவு கவர்ச்சி..?

தோற்றம் மட்டுமில்லை. அவனது நடை, பேச்சு, பாவனையுமே ஏகத்துக்கு மாறியிருக்கிறது. சற்றுமுன் நடந்து வந்தானே ஒரு நடை.. என்னவோ இவன்தான் இந்த உலகத்துக்கே அதிபதி என்பது மாதிரி.. அந்த நடையில்தான் என்ன ஒரு கம்பீரம்..?? இப்போது யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறானே.. கோபத்துடன்.. ஆனால் கட்டுப்பாடான கோபத்துடன்.. அந்தப் பேச்சில்தான் என்ன ஒரு ஆளுமை..?? பேசுகையில் அசையும் அவனது கைவிரல்கள்.. மூடித்திறக்கும் அந்த இதழ்கள்.. சுருங்கி விரியும் அந்த புருவங்கள்.. எல்லாவற்றிலும் என்ன ஒரு வசீகரம்..??

நந்தினி அந்தமாதிரி அசோக்கை ஓரவிழிப் பார்வையாலேயே விழுங்கிக்கொண்டிருக்க, அசோக் பேசி முடித்தான். காலை கட் செய்து செல்போனை மேஜையில் வைத்தவன், நந்தினியை நிமிர்ந்து பார்க்காமலே பட்டென்று சொன்னான்.

“காலேஜ்ல பாத்ததை விட இப்போ இன்னும் கும்முன்னு இருக்குற நந்தினி..!!”

அசோக் சொல்லிவிட்டு அவளை நிமிர்ந்து பார்த்து அழகாக புன்னகைத்தான். நந்தினியின் முகத்திலோ பக்கென ஒரு அதிர்ச்சி. இத்தனை வருடங்கள் கழித்து பார்ப்பவனிடம் இருந்து இந்த மாதிரியான ஆரம்ப வார்த்தைகளை அவள் சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. அவனது கமென்ட்டிற்கு எந்த மாதிரி ரியாக்ட் செய்யவேண்டும் என்று கூட அவளுக்கு பிடிபடவில்லை. ‘தேங்க்ஸ்..’ என்று ஈயென இளிக்க வேண்டுமா..? இல்லை.. ‘இப்டிலாம் எங்கிட்ட பேசாதிங்க..?’ என்று கோபம் கொப்பளிக்க வேண்டுமா..?

நந்தினி அந்த மாதிரி குழப்பத்தில் திகைக்க, அசோக்கோ கூலாக அவளது அழகு முகத்தை ரசித்துக் கொண்டிருந்தான். சில வினாடிகள் அவளுடைய முகத்தில் நிலைத்திருந்த அவனது பார்வை.. அப்புறம் மெல்ல மெல்ல கீழிறங்கி அவளது கழுத்து, புஜம், மார்பு, இடுப்பு என இறங்க.. ஒவ்வொரு பாகத்திலும் ஓரிரு வினாடிகள் தாராளமாய் தங்கியிருந்து மோகமாய் வெறிக்க.. நந்தினிக்கு உடல் கூசுவது மாதிரி ஒரு உணர்வு..!! அவஸ்தையாய் நெளிந்தாள்.

“ம்ம்ம்… அப்புறம்.. எப்படி இருக்குற..?” அசோக்கின் குரலில் ஒரு மிதமிஞ்சிய எள்ளல்.

“ந..நல்லாருக்கேன்..” நந்தினிக்கோ வார்த்தைகள் தடுமாறின.

“உன்னை என் லைஃப்ல திரும்ப மீட் பண்ணவே கூடாதுன்னு நெனச்சிருந்தேன்.. இப்படி என் அப்பா உன்னை தேடிக் கண்டுபுடிச்சு என் முன்னாடி வந்து நிறுத்துவாருன்னு நான் கொஞ்சம் கூட நெனைக்கலை..”

“உ..உங்களுக்கு என் மேல கோவம் இருக்கும்னு நெனைக்கிறேன்.. அ..அது நியாயந்தான்..!! ஆனா நான்..”

“ப்ச்.. கோவம்லாம் ஒன்னும் இல்லைப்பா.. அதுலாம் நான் எப்போவோ மறந்துட்டேன்..!! ம்ம்.. சரிசரி.. மேல சொல்லு.. ஏதோ சொல்ல வந்தியே..?”

“நா..நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..”

“என்ன..?”

“அ..அன்னைக்கு..”

“இரு இரு.. ஒரு நிமிஷம்..!! மொதல்ல சாப்பிட ஏதாவது ஆர்டர் பண்ணிக்கலாம்..!!” என்று அவளை இடை மறித்தவன்,

“ஹலோ பாஸ்..” என்று திரும்பி பேரரை அழைத்தான்.

“ஜூஸ் சாப்பிடலாமா..?” என்று நந்தினியிடம் கேட்க, அவள்

“ம்ம்.. சாப்பிடலாம்..” என்று தலையசைத்தாள்.

“ரெண்டு குக்கு மில்க் ஷேக்..!!”

என்று பேரரிடம் சொன்ன அசோக், நந்தினியை ஏறிட்டு விஷமமாக புன்னகைத்தான். நந்தினிக்கு சுருக்கென்றது. அவளுடைய நெஞ்சில் ஏனோ இப்போது ஒரு திடீர் படபடப்பு. அசோக்கோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கேஷுவலான குரலில் சொன்னான்.

“ஆறு வருஷம் ஆகிப் போச்சு நந்தினி..”

“ம்ம்.. லாஸ்ட் எக்ஸாம் அன்னைக்கு பாத்ததுல..?”

“ஹாஹா.. நான் அதை சொல்லலை..”

“அ..அப்புறம்..?”

“குக்கு மில்க் ஷேக் சாப்பிட்டு ஆறு வருஷம் ஆகிப்போச்சுன்னு சொன்னேன்..!! இன்னைக்கு உன்னைப்பாத்ததும் திடீர்னு ஞாபகம் வந்துடுச்சு..!!”

“ஓ..!!” நந்தினிக்கு மூக்குடைபட்ட மாதிரியான ஒரு உணர்வு.

“ம்ம்.. கமான்.. நீ என்னவோ சொல்ல வந்தியே.. சொல்லு..”

“ஆங்.. அன்னைக்கு..” நந்தினி மீண்டும் ஆரம்பிக்க,

“ஒரு நிமிஷம் இரு.. ஒரு சிகரெட் பத்த வச்சுக்குறேன்..”

அசோக் மீண்டும் அவளை இடைமறித்து, அவள் சொல்ல வந்ததை சொல்ல விடாமல் தடுக்க, நந்தினி காய்ந்து போனாள். ‘ப்ச்..’ என்று மெலிதாக சலிப்பாக சொல்லிக் கொண்டாள். அசோக் கூலாக ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டான். உள்ளே இழுத்த மொத்த புகையையும், உதடுகள் குவித்து மெல்ல மெல்ல வெளியே ஊதியவன், மீண்டும் கேட்டான்.

“ம்ம்.. இப்போ சொல்லு.. என்ன சொல்லணும் எங்கிட்ட..?”

“அன்னைக்கு..”

“ப்ச்.. என்ன நந்தினி.. அப்போ இருந்து அன்னைக்கு அன்னைக்குன்னு சொல்லிட்டு இருக்குற..? என்னைக்குன்னு சொன்னாத்தான எனக்கு புரியும்..?” அசோக் சற்றே எரிச்சலாக,

“அ..அதான்.. அந்த.. லாஸ்ட் எக்ஸாம் எழுதின அன்னைக்கு..” நந்தினி திணறினாள்.

“ஓ.. அன்னைக்கு..!! ஓகே ஓகே..!! ம்ம்.. மேல சொல்லு.. அன்னைக்கு..?” அசோக் கேட்க, நந்தினி கண்களை மூடி ‘ஹ்ஹ’ என்று மூச்சுக்காற்றை சலிப்பாக வெளிப்படுத்திவிட்டு ஆரம்பித்தாள்.

“அன்னைக்கு நான் உங்ககிட்ட அந்த மாதிரி பேசிருக்க கூடாது..!! என்னதான் எனக்கு உங்களை புடிக்கலைன்னாலும்.. அதை நாகரிகமா சொல்லிருந்திருக்கலாம்.. அந்தமாதிரி பேசி உங்களை ஹர்ட் பண்ணிருந்திருக்க கூடாது..!! ஐ’ஆம் ரியல்லி ஸாரி.. எ..என்னை மன்னிச்சுடுங்க..!!”

“ஓஹோ.. அன்னைக்கு பண்ணினதுக்கு இன்னைக்கு மன்னிப்பா..?? ஹா.. பரவால விடு.. நீ ஒன்னும் அதுக்காகலாம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை..!! அன்னைக்கு நடந்ததை நான் அன்னைக்கே மறந்துட்டேன்..” வேண்டுமென்றே அந்த ‘அன்னைக்கு’க்கு அதிக அழுத்தம் கொடுத்தான்.

“இ..இல்லை.. நான் பண்ணினது பெரிய தப்பு.. நான் உங்களை அந்த மாதிரி..”

“ப்ச்.. விடுன்னு சொல்றேன்ல..? ஆக்சுவலா நீ அந்த மாதிரி பேசினதுக்காக.. நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்..!!”

“தே..தேங்க்ஸா..? எ..எதுக்கு..?”

02

“ஆமாம்.. அன்னைக்கு மட்டும் நீ அப்படி பேசாம இருந்திருந்தா.. நான் இன்னும் அதே மாதிரி அம்மாஞ்சியாத்தான் இருந்திருப்பேன்..!! உலகம்னா என்ன.. நம்மை சுத்தி என்ன நடக்குது.. யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்.. இது எதுவுமே தெரியாம இன்னும் அதே மாதிரி அப்பாவி முட்டாளா இருந்திருப்பேன்..!! உன்னோட அந்த பேச்சுதான் இன்னைக்கு என்னோட மாற்றத்துக்கு காரணம்.. இந்த மாற்றம் எனக்கு புடிச்சிருக்கு.. ஐ’ஆம் ரியல்லி ஹேப்பி நவ்..!! ஸோ.. தேங்க்யூ.. தேங்க்யூ வெரி மச் நந்தினி.. அந்த மாதிரி என்னை ஹர்ட் பண்ணினதுக்கு..!!”

Comments

Scroll To Top