என்னாச்சு இப்போ.. ஏன் டென்ஷனா இருக்குற..?” நான் சற்று சாந்தமாகவே கேட்டேன். “ட்ரான்ஸ்ஃபர் கேட்டிருக்கியாமே..?” “உனக்கு யார் சொன்னா..?” “யார் சொன்னா என்ன..? உண்மையா.. பொய்யா..?” “ம்ம்.. உண்மைதான்..!! அதுக்கென்ன..?” “அதுக்கு என்னவா..? எப்புடி அசோக்கு இப்டிலாம் உன்னால பேச முடியுது..?” அவர் நிஜமாகவே நொந்து போனவராய் கேட்டார். “எனக்கு வேற வழி தெரியலை பன்னீர்..” நான் விட்டேத்தியாக சொன்னேன். “அதுக்காக.. ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு ஓடிப்போயிட்டா.. எல்லாம் சரியாயிடுமா..?” அவருடைய குரல் இப்போது சற்று காட்டமாக ஒலித்தது. […]