ஆண்மை தவறேல் – 10

(Tamil Kama Stories - Aanmai Thavarael 10)

Raja 2013-11-20 Comments

Tamil Kama Stories – ஆறுதலாக சொன்ன மஹாதேவன், ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அவள் முன் அமர்ந்து கொண்டார். ‘என்ன ஆயிற்று.. எப்படி நடந்தது..?’ என்கிற ரீதியில் நலம் விசாரிக்க ஆரம்பித்தார். நந்தினி தன் தங்கையை அனுப்பி காபி வாங்கி வர செய்தாள். காபி வந்ததும் அதை மஹாதேவனிடம் நீட்ட, அவர் அதை வாங்கி மெல்ல உறிஞ்சினார். அப்போதுதான் அமுதா மெல்ல விசும்ப ஆரம்பித்தாள்.

“இப்படி ரெண்டு பொட்டை புள்ளைகளோட என்னை தவிக்க விட்டுட்டு போயிட்டாரேண்ணே..?”

“ஐயோ.. அதையே நெனச்சு கவலை பட்டுட்டு இருக்காதம்மா.. இனி ஆக வேண்டியதை பாரு..!! அதான் நான்லாம் இருக்கேன்ல..? சும்மா விட்ருவேனா..?”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. அவர் செத்ததுக்கு கூட எந்த சொந்தக்காரனும் வந்து எட்டிப் பாக்கலை.. ஏதோ நீங்க இருக்குற நம்பிக்கைலதான் நாங்க இருக்கோம்ண்ணே..!! அவருக்கு பிசினஸ்ல நஷ்டம் வந்து நாங்க நடுத்தெருவுல நின்னப்போவும், அவருக்கு உங்க கம்பெனில வேலை போட்டு கொடுத்து.. எங்களை தலை நிமிந்து வாழ வச்சீங்க..!! இப்போ அவர் எங்களை தனியா தவிக்க விட்டு போனப்பவும்.. எங்களுக்கு ஆறுதலா இருக்கீங்க.. நாங்க உங்களுக்கு ரொம்ப கடன் பட்டிருக்கோம்ண்ணே..!!”

“அதெல்லாம் ஒண்ணுல்லம்மா.. நான்தான் சதானந்தம்கிட்ட ரொம்ப கடன்பட்டிருக்கேன்.. நான் பிசினஸ் ஆரம்பிச்ச காலத்துல என் கம்பனி வளர்ச்சிக்கு அவர் எவ்வளவு உதவியா இருந்தாரு தெரியுமா..? எத்தனை எத்தனை பெரிய காண்ட்ராக்ட்லாம் அவர் மூலமா எங்க கம்பெனிக்கு வந்திருக்கு தெரியுமா..? ம்ம்ஹ்ஹ்ம்ம்.. ஏதோ அவருக்கு நேரம் சரியில்ல.. கடைசி காலத்துல பிசினஸ் நொடிச்சு போய்.. அந்த கஷ்டத்துலையே மனசும் நொந்து போய்.. போய் சேர்ந்துட்டாரு..!! அவரு எனக்கு செஞ்ச உதவிக்கு முன்னால.. நான் செய்ற உதவிலாம் ஒன்னுமே இல்ல..!! என்னை உன் கூட பொறக்காத அண்ணனா நெனச்சுக்கோ.. நான் செய்ற உதவிலாம் ஒரு தங்கச்சிக்கு அண்ணன் செய்ற கடமையா நெனச்சுக்கோ..!!”

“ஹ்ஹ.. என் கூடப்பொறந்த அண்ணனுகளே, எங்களுக்கு கஷ்டம் வந்தப்போ ஓடி ஒளிஞ்சுக்கிட்டானுக.. நீங்க எங்களுக்கு செய்ற உபகாரத்துக்கு நாங்க உங்களுக்கு எப்படி கைமாறு செய்யப் போறோம்னே தெரியலைண்ணே..!!”

“ஐயோ… என்னம்மா நீ..? சும்மா சும்மா அதையே பேசிக்கிட்டு..!! நாமதான் இன்னும் கொஞ்ச நாள்ல ஒரே குடும்பமா ஆகப் போறோமே.. குடும்பத்துக்குள்ள இந்த மாதிரி கணக்கு வழக்கு பாக்கணுமா..?? சரி.. அந்தப் பேச்சை விடு..!! நீ இப்படி நடந்ததையே நெனச்சுக்கிட்டு இருக்காம.. தைரியமா இரு.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..!!”

அமுதாவுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக சொன்ன மஹாதேவன், அந்த பேச்சை மற்றும் எண்ணத்துடன் வந்தனாவிடம் திரும்பி புன்னகையுடன் கேட்டார்.

“என்னம்மா வந்தனா.. உன் படிப்புலாம் எப்படி போயிட்டு இருக்கு..?”

“ம்ம்.. நல்லா போயிட்டு இருக்கு அங்கிள்..”

“எக்ஸாம்லாம் முடிஞ்சதுல..?”

“ஆங்.. போன மாசமே எல்லாம் முடிஞ்சது அங்கிள்..”

“எப்படி.. நல்லா பண்ணிருக்கியா..?”

“ம்ம்.. நல்லா பண்ணிருக்கேன்..”

“அடுத்து என்ன பண்ணலாம்னு ப்ளான் வச்சிருக்குற..?” மஹாதேவன் அப்படி கேட்டதும், வந்தனா மிகவும் உற்சாகமானாள். அவளுடைய கண்களில் புதிதாக ஒரு மின்னல் மின்ன,

“எனக்கு MSc விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கணும்னு ரொம்ப ஆசை அங்கிள்.. மாஸ் மீடியால பெரிய ஆளா வரணும்னு..” அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, நந்தினி அவளை இடைமறித்து கோபமாக சொன்னாள்.

“ஏய்.. வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்ட..? லூசு மாதிரி ஏதாவது உளறிக்கிட்டு..!!”

இப்போது மஹாதேவன் உடனே வந்தனாவுக்கு சப்போர்ட் செய்தார்.

“ஏன்மா அவளை திட்டுற..? அவ என்ன உளர்றா..? என்னவா வரப்போரோம்னு எவ்வளவு தெளிவா பேசுறா.. அவளை போய் உளர்றான்னு சொல்ற..?”

“இல்ல அங்கிள்.. அவ ஏதோ புரியாம பேசுறா.. அதுக்குலாம் ரொம்ப செலவாகும்.. நாங்க இப்போ இருக்குற நெலமைல..”

“ப்ச்.. செலவை பத்திலாம் நீ ஏன் கவலைப்படுற..? அதுலாம் நான் பாத்துக்குறேன்..” என்றவர் வந்தனாவின் பக்கம் திரும்பி,

“மீனாக்ஷி யுனிவர்சிட்டில நமக்கு தெரிஞ்சவங்க இருக்காங்கம்மா வந்தனா.. அங்க படிக்கிறதுக்கு உனக்கு சம்மதமா..?” என்று கேட்க, வந்தனாவின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

“அங்க படிக்கணும்னுதான் என் ஆசை அங்கிள்.. என் கனவுன்னு கூட சொல்லலாம்..!!”

“ஹாஹா.. அப்போ அங்க உனக்கு சீட்டு கெடைச்சுட்டதாவே வச்சுக்கோ.. சரியா..??”

“தேங்க்ஸ் அங்கிள்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்..!!”

வந்தனா முகமெல்லாம் பூரிப்பும் புன்னகையுமாய் சொன்னாள். நந்தினியும், அமுதாவும் என்ன சொல்வது என்று தெரியாமல் அவஸ்தையில் மூழ்கியிருந்தார்கள். ஆனால் அதேநேரம் வந்தனாவின் குழந்தைத்தனமான பூரிப்பு, அவர்கள் இருவருக்கும் ஒருவித சந்தோஷத்தை கொடுக்கவே செய்தது.

மஹாதேவன் கிளம்பியபோது அவரை வழி அனுப்பி வைப்பதற்காக நந்தினி உடன் சென்றாள். இருவரும் கீழ்த்தளம் செல்ல படிக்கட்டில் இறங்கிக்கொண்டிருக்கும்போது மஹாதேவன் கேட்டார்.

“என்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றதா சொல்லிருக்காங்க..?”

“நாளைக்கு அங்கிள்..”

“ம்ம்.. இந்தா.. இதை செலவுக்கு வச்சுக்கோ..!!” மஹாதேவன் தன் பர்ஸ் திறந்து உள்ளே கத்தையாக இருந்த மொத்த பணத்தையும் எடுத்து நந்தினியின் கையில் திணிக்க, அவளோ பதறினாள்.

“ஐயையோ.. பணம்லாம் வேணாம் அங்கிள்.. எங்கிட்ட இருக்கு.. சமாளிச்சுக்குவேன்..!!”

“ப்ச்.. பொய் சொல்லாத நந்தினி..!! ம்ம்.. வாங்கிக்கோ..!!” சற்றே கடுமையான குரலில் சொன்னவர், வலுக்கட்டாயமாக பணத்தை அவளுடைய கையில் திணிக்க, அவளும் வேறு வழியில்லாமல் வாங்கிக்கொண்டாள்.

“தேங்க்ஸ் அங்கிள்..!!”

என்று கம்மலான குரலில் சொன்னவள், தலையை குனிந்து கொண்டாள். படிக்கட்டில் பாதி இறங்கிய நிலையில் இருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். ஒருமாதிரி குறுகிப்போய் நின்றிருந்த நந்தினியையே சில வினாடிகள் அமைதியாக பார்த்த மஹாதேவன், அப்புறம் திடீரென ஏதோ யோசனை வந்தவராய் கேட்டார்.

“ஆங்.. உன்கிட்ட ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன்மா..”

“என்ன அங்கிள்..?”

“நேத்து உன் அம்மாகிட்ட பேசிட்டு இருந்தப்போதான் தெரிஞ்சது.. நீயும் அசோக்கும் ஒரே காலேஜ்ல, ஒரே வருஷத்துல படிச்சவங்களாமே..??”

“ம்ம்.. ஆ..ஆமாம் அங்கிள்..!!” சொல்லும்போதே நந்தினிக்கு லேசாய் உதறல் எடுத்தது.

“அப்போ.. என் பையனை காலேஜ்லயே உனக்கு தெரியுமா..?”

“பா..பாத்திருக்கேன்.. ஆ..ஆனா ரொம்பலாம் பழக்கம் இல்ல..!!” நந்தினி திணறி திணறி பொய் சொன்னாள்.

“ஓ..!! ம்ம்ம்ம்.. அப்போ வேற மாதிரி இருந்திருப்பான்..!! இப்போ எப்படி இருக்கான்னு பாத்தியா..? அம்மாட்ட அவன் ஃபோட்டோ கொடுத்திருந்தேன்..!!”

“ம்ம்.. பார்த்தேன் அங்கிள்..”

“பிடிச்சிருக்கா..?”

“எ..எது..?”

“என் பையனை உனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டேன்..?”

“ம்ம்.. பி..பிடிச்சிருக்கு..” நந்தினி சற்றே தயக்கமாய் சொன்னாள்.

“அவனை பத்தி சில விஷயங்கள் உன் அம்மாகிட்ட சொன்னேன்.. உன்கிட்ட அதுபத்தி சொன்னாங்களா..?”

“ம்ம்.. சொன்னாங்க..!!”

“அதுக்கப்புறமும் அவனை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதம்தானா..? உனக்கு சம்மதம்னு உன் அம்மா சொன்னாங்க.. ஆனா.. உன் வாயால அதை கேக்கனும்னு எனக்கு ஆசை..!! சொல்லும்மா.. என் பையனை கட்டிக்க உனக்கு சம்மதமா..?”

மஹாதேவன் மிக கூர்மையாக அந்த கேள்வியை அவள் முன்வைக்க, நந்தினி இப்போது தடுமாறினாள். அவளுடைய உடலில் லேசாய் ஒரு பதற்றம் வந்து தொற்றிக்கொண்டது. விரல்கள் மெலிதாக நடுங்கின. அவள் அமைதியாக நிற்பதை பார்த்த மஹாதேவன், அவரே லேசான புன்முறுவலுடன் தொடர்ந்து பேசினார்.

“ஹாஹா..!! என்னடா இவன்.. உதவியும் பண்ணிட்டு.. உதவாக்கரை புள்ளயையும் தலைல கட்டப் பாக்குறானேன்னு நெனைக்காத..!! நான் உங்களுக்கு பண்ற உதவி, சதானந்தத்துக்கு நான் பட்டிருக்குற நன்றிக்கடன்.. அதுக்கும் இந்தக்கல்யாணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல..!! அதேமாதிரி.. என் புள்ளையும் உதவாக்கரை புள்ளை இல்ல.. பொறுப்பானவன்.. ஹார்வர்ட் யுனிவர்சிட்டில பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சிருக்கான்.. நல்ல திறமையானவன்.. புத்திசாலி.. எங்கிட்ட இருந்து பிசினசை அவன் கவனிக்க ஆரம்பிச்சப்புறம்.. கம்பனி எந்த அளவுக்கு முன்னேறி இருக்கு தெரியுமா.. லாபம் எந்த அளவுக்கு அதிகமாயிருக்கு தெரியுமா..?? அதுமட்டும் இல்ல.. ரொம்ப அன்பானவன்.. என் மேலயும், எங்ககிட்ட வேலை பாக்குறவங்ககிட்டையும் ரொம்ப பிரியமா நடந்துப்பான்..!!”

படபடவென பேசிய மஹாதேவன் சற்றே நிறுத்தினார். அவர் சொல்வதை எல்லாம் நந்தினி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். பதில் எதுவும் சொல்லவில்லை. மஹாதேவன் தொடர்ந்தார்.

“இப்போதான்மா அவன்கிட்ட இந்தமாதிரி தேவையில்லாத கெட்ட பழக்கம்லாம்..!! எஞ்சினியரிங் முடிக்கிற வரை என் பையன் ரொம்ப நல்லவனா இருந்தான்.. அப்புறந்தான் அவன் நடத்தைல நெறைய சேன்ஜ்.. என்ன காரணம்னு எனக்கு இதுவரை எதுவும் புரியலை.. ” மஹாதேவன் வருத்தமாய் சொல்ல, நந்தினியின் மனதுக்குள் இப்போது ஏதோ ஒன்று குறுகுறுக்க ஆரம்பித்தது.

Comments

Scroll To Top