ஐ ஹேட் யூ பட் – 17

(Tamil New Sex Stories - I Hate U But 17)

Raja 2013-10-15 Comments

Tamil New Sex Stories – அப்புறம் ஓரிரு நிமிடங்களுக்கு அவர்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. அவர்களுக்குள் நிலவிய அந்த இறுக்கத்தின் பிடியில் சிக்குண்டு இருந்தார்கள். எங்கேயோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தனர். சிறிது நேரத்தில் அசோக் பெஞ்சில் இருந்து மெல்ல எழுந்தான்.

“ஓகே ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நான் கெளம்புறேன்..!!”

என்றவாறு ப்ரியாவின் பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தான். அவனுடைய முதுகையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த ப்ரியா, திடீரென மனதில் ஏதோ தோன்றியவளாய் அவனை அழைத்தாள்.

“அசோக்.. ஒரு நிமிஷம்..!!”

“என்ன..??” அசோக் திரும்பிப் பார்த்து கேட்டான்.

“அந்த லாகின் பேஜ் இஷ்யூ.. நீதான பாத்துட்டு இருக்குற..??”

“ஆமாம்..!!” அசோக் குழப்பமாகவே சொன்னான்.

“உன் சீட்டுக்கு போனதும்.. அந்த இஷ்யூவை நீ எப்போ முடிப்பேன்னு.. எனக்கு ஒரு எஸ்டிமேட் அனுப்பு..!! சரியா..??”

ப்ரியா ஒருமாதிரி கண்களை இடுக்கி அவனை பார்த்தவாறு, ஒருவித அதிகாரத் தொனியுடன் அவ்வாறு சொன்னாள். அவள் டெக்லீட் ஆனதும் முதன் முறையாக போடுகிற உத்தரவு..!! அதுவும் அவள் கொள்ளை கொள்ளையாய் அன்பு வைத்திருக்கிறவனை பார்த்து ஆணவத்துடன் தொடுத்த உத்தரவு..!!

அவள் அவ்வாறு சொன்னதும் அசோக் அப்படியே அதிசயித்துப் போனான். ப்ரியாவை ஒருமாதிரி நம்பமுடியாத பார்வை பார்த்தான். என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருகணம் தடுமாறினான். அவனுடைய தடுமாற்றம் ப்ரியாவுக்கு புன்னகையை வரவழைத்தது. அவளையும் மீறி அந்த புன்னகை அவளது உதட்டின் வழியே வெளிக்கசிந்தது. ‘நான் இப்போது உனக்கு பாஸாக்கும்..’ என்பது மாதிரி திமிராக புன்னகைத்தாள்..!!

அசோக்கின் தடுமாற்றம் ஒரு சில வினாடிகளுக்குத்தான்..!! அவனும் உடனே அவனது நிலைமையை சமாளித்துக்கொண்டு, ப்ரியாவை நோக்கி பதிலுக்கு ஒரு புன்னகையை வீசினான். அப்புறம் மெல்ல நடந்து சென்று அவளை நெருங்கினான். சற்றே குனிந்து, தனது முகத்தை அவளுடைய முகத்துக்கு அருகே எடுத்து சென்று புன்னகை மாறாத முகத்துடனே சொன்னான்.

5

“எஸ்டிமேட்தான..?? அதுக்கெதுக்கு சீட்டுக்கு போகணும்..?? இங்கயே சொல்றேன்..!!”

“இ..இங்கயா..??” அசோக்கின் புன்னகை ப்ரியாவை சற்றே மிரள செய்திருந்தது.

“ஹ்ம்ம்..!! சொல்றேன்.. நோட் பண்ணிக்கோங்க.. இன்னும் பத்து நாள் ஆகும்..!!”

“பத்து நாளா..?? அவ்ளோ நாள் எதுக்கு..??” ப்ரியா நெற்றியை சுருக்கினாள்.

“அது கொஞ்சம் காம்ப்ளிகேட்டடான இஷ்யூ.. ஸோ.. பத்து நாள் ஆகும்..!! இல்ல.. உங்களுக்கு ஏதாவது ஈசியான வழி தெரியும்னா.. கொஞ்சம் அனலைஸ் பண்ணி சொல்லுங்க.. எஸ்டிமேஷனை மாத்திக்கலாம்..!! என்ன சொல்றீங்க..??”

அசோக் அந்த மாதிரி கிடுக்கிப்பிடி போடவும் இப்போது ப்ரியா தடுமாறினாள். அவனையே சில வினாடிகள் மிரட்சியாக பார்த்தவள், அப்புறம் தனது தடுமாற்றத்தை சமாளித்துக் கொண்டு சொன்னாள்.

“ஓகே.. இட்ஸ் ஓகே..!! எனக்கு இப்போ அதுக்குலாம் டைம் இல்ல.. உன்னால எப்போ முடிக்க முடியுதோ.. அப்போவே முடி..!!”

என்று அசோக்கின் வழிக்கு வந்தாள். இப்போது அசோக்கின் புன்னகை மேலும் பெரிதானது. ‘அது.. அந்த பயம் இருக்கணும்..!!’ என்று வாய்விட்டு சொல்லவில்லை அவன். ஆனால் மனதுக்குள் நினைத்துக்கொண்டே, அந்த இடத்தை விட்டு கிளம்பினான். அவன் ஸ்டைலாக போவதையே ப்ரியா திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள். ‘எல்லாருக்கும் ஒரு வீக்னஸ் இருக்கு ப்ரியா..!!’ என்று அசோக் எப்போதோ சொன்னது ப்ரியாவுக்கு இப்போது ஞாபகம் வந்தது..!!

அத்தியாயம் 10

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்று சொல்வார்கள் இல்லையா..?? அடைகிற அவமானம் கூட சில நேரங்களில் அத்தகைய உதவியை செய்யக்கூடும்..!! யாருக்குமே தன்மானம் என்பது மிகவும் உன்னதமான விஷயம்..!! அந்த தன்மானத்தை சீண்டுகிற மாதிரியான சம்பவம் நடக்கிறபோது.. அழுகை வரலாம்.. ஆத்திரம் வரலாம்.. ஆனால் அதையெல்லாம் விட தனது நிலையை உயர்த்திக் காட்டவேண்டும் என்ற ஒரு வேகம் வர வேண்டும்..!! ஆன்சைட் சென்று அவமானப்பட்டு திரும்பியபோது கோவிந்திற்கு ஒரு வேகம் வந்ததே.. தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று.. அது மாதிரி..!! அத்தகைய ஒரு வேகத்தையே அசோக் அள்ளி வீசிய வார்த்தைகள் ப்ரியாவுக்குள்ளும் ஏற்படுத்தின..!!

அதன் பிறகு வந்த நாட்களில் அந்த வேகமே ப்ரியாவை உந்தித் தள்ளியது. தனது திறமையால் டெக் லீட் பதவி தன்னை தேடி வரவில்லை என்பதை அவள் நன்றாகவே உணர்ந்து வைத்திருந்தாள். ஆனால் இப்போது அந்த பதவி தானாக வந்த பிறகாவது, அதற்கேற்ற திறமையை வளர்த்துக் கொள்வதன் மூலம், எல்லாவற்றையும் சரிக்கட்டிவிட முடியும் என்றே நம்பினாள். கம்யூனிகேஷன் ஸ்கில், பிரசன்டேஷன் ஸ்கில் போன்ற சாஃப்ட் ஸ்கில்ஸ்களில் அவள் எப்போதுமே கில்லாடிதான். டெக்னிகல் ஸ்கில்ஸ்தான் அவளது பலவீனம். அந்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்பதுதான் அவளது முதல் குறிக்கோளாக இருந்தது.

ப்ரியா நினைத்தை முடிக்க நிறைய முயற்சிகள் எடுத்துக்கொண்டாள் என்றுதான் சொல்லவேண்டும். தான் எந்தெந்த டெக்னாலஜிகளில் வீக் என்பதை முதலில் பட்டியல் இட்டுக் கொண்டாள். அவர்கள் கம்பனியில் அந்த டெக்னாலஜிகளில் எங்காவது ட்ரெயினிங் நடந்தால், தேடிப்பிடித்து தன்னை நாமினேட் செய்து கொண்டாள். மிகவும் சின்சியராக அந்த ட்ரெயினிங் எல்லாம் அட்டன்ட் செய்தாள். சில ஆன்லைன் டெக்னாலஜி ஃபோரம்களில் உறுப்பினர் ஆகிக்கொண்டாள். அங்கு நடக்கிற விவாதங்களை ஒதுங்கி நின்று கவனித்தாள். நிறைய கற்றுக்கொண்டாள்.. சில புரியாத விஷயங்களை மனப்பாடம் செய்தாவது மனதில் நிறுத்திக் கொண்டாள்..!!

வீட்டிலும் எந்த நேரமும் புத்தகமும் கையுமாகவே அலைந்தாள். டிவி, ஆவி, ஜூவி எல்லாம் கொஞ்ச நாட்களுக்கு டிஸ்டன்ஸில் வைத்தாள். ‘நாலு விஷயங்களை பத்தி தெரிஞ்சுக்குறது தப்பே இல்ல..!!’ எனும் தனது கோட்பாட்டை சற்றே மாற்றி அமைத்துக் கொண்டாள். இப்போதைய தனது குறிக்கோள், தேவையான விஷயங்களில் தெளிவான அறிவு பெறுவதுதான் என்பதை நன்கே உணர்ந்திருந்தாள். மகளுடைய இந்த மாற்றத்தை வரதராஜன் வியப்பாக பார்த்தார். கண்விழித்து படிக்கிற மகளுக்கு காபி ஆற்றியவாறே வந்தவர், அவள் அமர்ந்திருந்த டேபிள் மீது விரிந்து கிடந்த மூன்று தடி தடி புத்தகங்களை பார்த்து மலைத்துப் போனார். மூன்று புத்தகங்களிலும் மாறி மாறி பார்வையை வீசுகிற மகளை பிரமிப்பாகவும், சற்றே கவலையாகவும் பார்த்தார்.

“என்னம்மா இது.. ஒரே நேரத்துல மூணு புத்தகத்தை வச்சு படிச்சுட்டு இருக்குற..??”

“ஆமாம் டாடி.. இதுல இருக்குறது அதுல இருக்காது.. அதுல இருக்குறது இதுல இருக்காது..!! ஆனா நம்ம மண்டைக்குள்ள மட்டும்.. எல்லாம் இருக்கணும்..!!” ப்ரியா சலிப்பாக சொன்னாள்.

“ஹ்ம்ம்.. இப்போலாம் டெயிலி இப்படி விழுந்து விழுந்து படிக்க ஆரம்பிச்சுட்ட..??”

“ஏன் டாடி.. படிக்க கூடாதா..??”

“இல்லம்மா.. காலேஜ் எக்ஸாம்க்கு கூட நீ இப்படி கண்ணு முழிச்சுலாம் படிச்சது இல்லையேன்னு கேட்டேன்..??”

மகள் மீது இருக்கும் அன்பில் வரதராஜன் சீரியசாக கேட்க, ப்ரியாவோ அந்த வாய்ப்பை கூட ஸீன் போட உபயோகித்துக் கொண்டாள்.

“ஹையோ.. காலேஜ் எக்ஸாமும் இதுவும் ஒன்னா டாடி ..?? டெக் லீட் பொசிஷன் எவ்வளவு கஷ்டம் தெரியுமா.. எத்தனை மீட்டிங் அட்டன்ட் பண்ணனும் தெரியுமா.. எத்தனை பேரை சமாளிக்கணும் தெரியுமா..?? எக்யுப்டா இருக்கணும் டாடி.. இல்லனா ஏமாத்திருவாங்க..!!”

“எகுப்னா..??” வரதாராஜன் தலையை சொறிந்தார்.

“ஷ்ஷ்ஷ்ஷ்..!! ஆயத்தமா இருக்கணும்னு அர்த்தம்..!! போருக்கு போறதுக்கு முன்னாடி.. இந்த கத்தியை நல்லா தீட்டிட்டு போறாங்கல்ல.. அந்த மாதிரி..!!”

“ஓ..!!!!”

“ப்ச்.. உங்களுக்கு இதுலாம் புரியாது.. காபியை குடுத்துட்டு நீங்க போய் தூங்குங்க.. நான் கொஞ்ச நேரம் படிச்சுட்டு படுத்துக்குறேன்..!!”

சலிப்பாக சொல்லியவாறே அவர் கையிலிருக்கும் காபியை ப்ரியா பிடுங்கிக்கொண்டு அவரை விரட்டினாள். எத்தனையோ பேரை சமாளிக்கவேண்டும் என்று ப்ரியா அப்பாவிடம் சொன்னாலும், அவளுடைய எய்ம் எல்லாம் ஒருவனை சமாளிப்பதில்தான் இருந்தது. அசோக்..!!!!

அவன் அன்று ப்ரியாவிடம் விட்ட சவாலின் பிறகு, இருவரும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோதிக் கொண்டார்கள். அவர்கள் கைகோர்த்து ஒன்றாக சுற்றித்திரிந்தபோது, அவர்களுடைய மனதுக்குள் தூங்கிய குழந்தைத்தனமான குணங்கள், இப்போது வெளியே குதித்து எதிரும் புதிருமாக சண்டையிட்டன. அற்பத்தனமாய்.. முதிர்வில்லா பிள்ளைகளாய் முட்டிக் கொள்வார்கள்..!!

கேஃப்டீரியாவில் மதிய உணவு அருந்துகையில் ஒரு நாள்..

டீமில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க, ஒரு மீட்டிங் முடித்துவிட்டு ப்ரியா சற்று தாமதமாகத்தான் வந்தாள். அவள் அவசரமாக வருவதையே அசோக் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தான். கையில் ஆவி பறக்கிற நூடுல்ஸ் தட்டுடன் வந்த ப்ரியா, அந்த டேபிளில் காலியாக இருந்த அந்த ஒற்றை இருக்கை நோக்கி சென்றாள். பின்புறத்தை தடவிக் கொண்டிருந்த துப்பட்டாவை விலக்கிவிட்டு அவள் உட்கார முனைய, அசோக் அந்த தருணத்துக்காகத்தான் காத்திருந்தவன் போல, தனது வலது காலை நீட்டி அந்த சேரில் வைத்து, ப்ரியாவை அமரவிடாமல் செய்தான். அவள் இப்போது வெடுக்கென திரும்பி கடுப்புடன் இவனை முறைத்தாள். இவனோ கூலாக..

Comments

Scroll To Top