நெஞ்சோடு கலந்திடு – 6
(Tamil Kama Stories - Nenjodu Kalanthidu 6)
Tamil Kama Stories – “ஒருநாள் ரெண்டு பெரும் ஊரை விட்டு ஓடுனாங்க.. ரயில்ல போயிட்டு இருக்குறப்போவே.. எதுத்த சீட்டுல உக்காந்திருக்குற பொண்ணை ரமேஷ் உஷார் பண்ணிட்டான்.. ரமா கொண்டு வந்த நகையை எல்லாம் அபேஸ் பண்ணிட்டு.. எதுத்த சீட்டு பொண்ணோட.. பாதி வழியிலயே ஜூட் வுட்டுட்டான்..!! மெட்ராஸ் வந்து முழிச்சு பாத்த ரமா.. அனாதையா நடுத்தெருவுல நின்னா..!! இப்படி ஒருத்தன் பேசிப்பேசியே ஏமாத்தி.. நம்ம வாழ்க்கையை சீரழிச்சுட்டானேனு.. மனம் குமுறிப்போய் நின்னா..!! அப்புறம் அவளை பாபுன்னு ஒரு நல்ல மனுஷன் ஏத்துக்கிட்டான்.. அது வேற கதை..”
“அண்ணா.. இந்தக்கதையை நான் ஏதோ பாரதிராஜா படத்துல பாத்திருக்கேன்..” அசோக் அப்படி சொல்ல, செல்வா இப்போது பம்மினார்.
“ஓ..!! அந்தப்படத்தை நீ பாத்துட்டியா..?”
“ஏண்ணா இப்படி இருக்குறீங்க..? என் உயிர்த்தோழன் கதையை என்கிட்டயே விடுறீங்க..?”
“சரி சரி.. அதை விடு.. நான் எதுக்கு இந்தக்கதையை சொல்ல வந்தேன்னு உனக்கு புரியுதா..?”
“எதுக்கு..??”
“நீ தண்ணியடிக்கிறது, தம்மடிக்கிறது, கவிதை எழுத தெரியாம இருக்குறது.. இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல அசோக்..”
“அப்புறம்.. வேற எது மேட்டர்..?”
அசோக் கேட்டதும் செல்வா ஒரு கணம் அமைதியானார். அவன் முகத்தை ஒருமாதிரி கூர்மையாக பார்த்தார். அப்புறம் அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார்.
“நீ திவ்யாவை எந்த அளவுக்கு உண்மையா லவ் பண்றேன்றதுதான் மேட்டர்..!! நீ அவளை எந்த அளவுக்கு லவ் பண்ற..?”
“அண்ணா.. உயிரையே கொடுப்பேண்ணா.. சின்ன வயசுல இருந்தே.. அவதான் என் பொண்டாட்டின்னு நெனச்சு உயிர் வாழ்ந்துட்டு இருக்கேன்..!!”
“அப்புறம் என்ன..? தைரியமா போய் உன் லவ்வை அவகிட்ட சொல்லு..!! உன் காதல் உண்மையா இருந்தா.. கண்டிப்பா அது சக்சஸ் ஆகும்..!!”
சொல்லிவிட்டு செல்வா மீண்டும் சுவரில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். விட்டத்தை வெறித்து பார்த்தபடி பல் குத்த ஆரம்பித்தார். அசோக்கும் இப்போது அமைதியானான். சிகரெட் புகையை நுரையீரலுக்கு அனுப்பியவாறே, சிந்தனையில் ஆழ்ந்தான். செல்வா சொல்வதில் நிறைய உண்மை இருக்கிறது என்று தோன்றியது. ‘தனது காதல் உண்மையானதுதானே..? அப்புறம் ஏன் இந்த தயக்கம்..?’ உண்மைக்காதலை உடைத்து சொல்ல.. ஏன் பயம் கொள்ள வேண்டும்..?? காதல் செய்பவர்களுக்கு அவர்களுடைய காதலை தவிர வேறு என்ன தகுதி வேண்டிக்கிடக்கிறது..?
சிகரெட் விரலை சுட ஆரம்பித்ததும், அசோக் அதை ஆஷ் ட்ரேயில் வைத்து நசுக்கினான். எங்கோ உறைந்து போன பார்வையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்த செல்வாவிடம் மெல்ல கேட்டான்.
“அப்போ.. நாளைக்கே திவ்யாட்ட என் லவ்வை சொல்லிடவாண்ணா..?”
“நீ சொல்றியோ இல்லையோ.. நான் சொல்லப்போறேன்..” அவர் பதிலை கேட்டு
“அண்ணா…” என அசோக் அலறினான்.
“ஐயையே.. நான் நாளைக்கு கண்மணிட்ட என் லவ்வை சொல்லப் போறேன்னு சொன்னேன்பா..!!”
“நல்லவேளை.. நான் பயந்தே போயிட்டேன்..!!”
“நீ எதுக்கு பயப்படுற அசோக்..? திவ்யா உன்னைத்தான் லவ் பண்றா.. அவ கண்ணுல நான் அந்தக்காதலை பார்த்தேன் அசோக்.. தைரியமா போய் சொல்லு.. அவ உன் லவ்வை அக்சப்ட் பண்ணிப்பா..!!”
“ம்ம்.. சரிண்ணா..”
“ம்ஹ்ஹ்ம்ம்.. எனக்குத்தான் நாளைக்கு என்னாகப் போகுதோ தெரியலை..”
வருத்தமான குரலில் சொன்ன செல்வாவை பார்க்க, அசோக்கிற்கு பாவமாக இருந்தது. மனுஷன் காதலுக்காக ரொம்ப ஏங்குகிறார் என்று தோன்றியது. அவ்வளவு நேரம் தன்னை உற்சாகப்படுத்திய அவருக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் சொல்லலாம் என்று எண்ணினான்.
“நீங்களும் ரொம்ப வொர்ரி பண்ணிக்காதீங்கண்ணா.. கண்டிப்பா கண்மணியும் உங்க லவ்வை அக்சப்ட் பண்ணிப்பா..!! தைரியமா போய் சொல்லுங்க..!!”
“நெஜமாவா சொல்ற..?” உடனே, சோர்ந்து போயிருந்த செல்வாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
“ஆமாண்ணா.. அவளும் பதிலுக்கு ஐ லவ் யூ சொல்லப் போறா பாருங்க..!!”
“அசோக்.. நீ சொல்றது மட்டும் நடந்துடுச்சுனா.. நான் உன் சக்கரைக்கு வாய் போடுறேன்..”
“அண்ணா…!!!!!” அசோக் இப்போது பெரிதாக அலறினான்.
“ச்சை.. ஸாரி அசோக்.. டங் ஸ்லிப் ஆயிடுச்சு..!! உன் வாய்க்கு சக்கரை போடுறேன்..!!”
“சரக்கடிச்சது நான்.. டங் ஸ்லிப் ஆகுறது உங்களுக்கா..? சைடிஷ் தின்னதுக்கே.. ரொம்ப உளர்றீங்கண்ணா நீங்க..!!”
அத்தியாயம் 6
அடுத்த நாள் மாலை.. அசோக் சீக்கிரமே ஆபீசில் இருந்து கிளம்பிவிட்டான். திவ்யாவிடம் இன்று தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று உறுதியான முடிவெடுத்திருந்தான். அவள் ஐந்தரைக்கெல்லாம் கல்லூரியில் இருந்து திரும்பி விடுவாள். அதற்குள் தானும் வீட்டை அடைந்து விடவேண்டும். அவளை எங்காவது வெளியில் அழைத்து செல்ல வேண்டும். மனதில் உள்ள காதலை துணிந்து சொல்லிவிட வேண்டும்..!!
தனது காதலை எப்படி அவளிடம் சொல்ல வேண்டும் என்பதற்கும்.. இரவே அவன் ஒத்திகை பார்த்துவிட்டான்..!! வார்த்தைகளை தேடித்தேடி தேர்ந்தெடுத்து.. மாலை போல கோர்த்து.. மனதுக்குள் வைத்திருந்தான்..!! அவ்வாறு அவன் ஒத்திகை பார்க்கையிலே.. சினிமாவில் நாயகர்கள் காதல் சொல்லும் காட்சிகள் ஞாபகத்துக்கு வந்தன. காதலை சொல்லுகையில் ஒரு கார்டும், ஒற்றை ரோஜாவும் கைவசம் இருந்தால் நல்லது என்று தோன்றியது..!!
அவன் தங்கியிருக்கும் அறைக்கு அருகாமையிலேயே ஒரு பெரிய ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் இருக்கிறது. ஆபீசில் இருந்து கிளம்பியதும் அசோக் நேராக அங்கேதான் சென்றான். ஆறு தளங்கள் கொண்ட அந்த காம்ப்ளக்ஸ்சின் நான்காவது தளத்தில்தான் அந்த கிரீட்டிங் கார்ட் அண்ட் கிஃப்ட் ஷாப் இருக்கிறது. விதவிதமான வாழ்த்து அட்டைகளும், அன்பளிப்பு பொருட்களும்.. குவித்தும் அடுக்கியும் வைக்கப்பட்டிருந்த.. மிகப்பெரிய கடை..!!
அசோக் கிட்டத்தட்ட ஒரு அரை மணி நேரம் செலவழித்து அந்த அட்டையை தேர்வு செய்தான். மாலை நேர மலையோரத்தில்.. நிழலுருவாய் தழுவிக்கொள்ளும்.. காதலனும் காதலியும்..!! உள்ளே திறந்து பார்த்தால்.. இரத்த நிறத்தில் துடிக்கும் இருதயம்..!! அருகிலேயே.. அசோக் திவ்யாவிடம் சொல்ல நினைத்த வார்த்தைகளுக்கு நெருங்கி அர்த்தம் வரக்கூடிய.. ஆங்கில சொற்றொடர்கள்..!! இறுதியாக கீழே.. இட்டாலிக் ஸ்டைலில்.. I Love You..!!
பார்த்ததுமே பிடித்துப்போக, அசோக் அதை எடுத்துக் கொண்டான். அநியாய விலை கேட்ட, பில் போடும் பெண்ணிடம், புன்னகை மாறாமல் பர்ஸ் திறந்து பணம் எடுத்துக் கொடுத்தான். பில்லிங் கவுண்டருக்கு அருகிலேயே, விற்பனைக்கு இருந்த சிவப்பு ரோஜா ஒன்றையும் கையில் எடுத்துக்கொண்டு,
“இதையும் பில்-ல சேர்த்துக்கோங்க..!!” என்றான்.
இரண்டையும் ஒரு கவரில் வைத்து வாங்கிகொண்டான். தன் தோளில் கிடந்த பேக் திறந்து உள்ளே வைத்தான். பேகை மீண்டும் தோளில் மாட்டிக்கொண்டு, ‘ஆல் தி பெஸ்ட்’ என்று புன்னகைத்த அந்த பெண்ணுக்கு, ஒரு புன்னகையை பதிலாக கொடுத்துவிட்டு வெளியே வந்தான். லிஃப்டுக்காக பட்டன் ப்ரஸ் செய்துவிட்டு காத்திருந்தான்.
அவனுடைய இதயம் முழுக்க ஒருவித படபடப்பும், ஒருவித நிம்மதியும் சரிவிகிதத்தில் நிறைந்திருந்தது. தனது காதலுக்கு திவ்யா என்ன பதில் சொல்லப் போகிறாள் என்ற எண்ணத்தினால் ஏற்பட்டது அந்த படபடப்பு..!! ஆனால்… இத்தனை நாளாய் மனதுக்குள்ளேயே காதலை பூட்டி பூட்டி வைத்து அனுபவித்த வேதனை.. இன்றோடு தீரப்போகிறது என்ற நினைவு.. அதே அளவு நிம்மதியையும் அசோக்கிற்கு கொடுத்திருந்தது..!!
லிஃப்ட் வந்ததும் ஏறிக்கொண்டான். கும்பலாக இருந்தது லிஃப்ட்..!! அசோக்கிற்கு ஒரு ஓரமாகவே இடம் கிடைத்தது. நெருக்கியடித்து நின்றுகொண்டான். அந்த கார்டை இன்னொரு முறை பார்க்கவேண்டும் போலிருந்தது. பேக் திறந்து கார்டையும் ரோஸையும் எடுத்தான். கார்ட் பிரித்து.. உள்ளே எழுதியிருந்த வரிகளை இன்னொரு முறை வாசித்தான்..!! தன் இதயத்தில் உள்ளவற்றை தெளிவாக எடுத்துரைக்கப் போகும் அந்த வரிகளை பார்த்ததும்.. அவனுடைய இதழ்களில் அவனையும் அறியாமல் ஒரு புன்னகை..!!
எங்கோ கனவுலகில் மிதந்து கொண்டிருந்த அசோக், க்ரவுண்ட் ஃப்ளோர் வந்து, ஆளாளுக்கு முண்டியடித்துக்கொண்டு இறங்கிய போதுதான்.. நனவுலகுக்கு திரும்பினான். எல்லோருக்கும் வழிவிட்டு லிஃப்ட் உள்ளேயே ஒதுங்கி நின்றான். கையில் இருந்த கார்டையும், ரோஸையும் திரும்பவும் பேகுக்குள் திணித்தான். பேகை தோளுக்கு கொடுத்துவிட்டு நிமிர்ந்தவன், அதிர்ந்து போனான்..!! லிஃப்டில் இருந்து எல்லோரும் இறங்கி சென்றிருக்க, அந்தப்பெண் மட்டும் இறங்காமல், இவனையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவள்.. அவனுடைய அக்கா… சித்ரா..!! அவளுடைய கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் பை..!!
“அ..அக்கா.. நீ.. நீ எங்க இங்க..?” என்று தடுமாறினான்.
“கொஞ்சம் திங்க்ஸ் வாங்க வேண்டி இருந்தது..” சித்ராவின் குரல் ஒருமாதிரி இறுக்கமாக ஒலித்தது.
“எ..எந்த ஃப்ளோர்ல ஏறுன..?” கேட்டுக்கொண்டே அசோக் லிஃப்ட் விட்டு வெளியே வர,
Comments