மலரே என்னிடம் மயங்காதே – 8

(Tamil Kama Stories - Malarae Ennidam Mayangathae 8)

Raja 2014-02-17 Comments

Tamil Kama Stories – “எப்டி..?” என்றேன் குழப்பமாய்.

“இங்க பாரு அசோக்கு.. நான் நேத்து அவளை அறைஞ்சது.. அத்தனை பேர் முன்னாடி உன்னை அவமானப் படுத்தினதுக்காக..!! உன்னை விரும்புறேன்னு சொன்னதுக்காக இல்ல..!!” அவர் தெள்ளத்தெளிவாய் சொல்ல, நான் இப்போது தடுமாறினேன்.

“ப…பன்னீர்.. எ..என்ன சொல்ற நீ..?”

1

“ஆமாம்.. உனக்கு புரியலையா..? வேற எதுக்கு அவளை அறைஞ்சேன்னு நெனச்ச..? பொண்ணு பாக்க வந்தவங்க முன்னாடி உன்னை அவமானப் படுத்துனத்தை தவிர.. என் பொண்ணு வேற என்ன தப்பு பண்ணிட்டா..? ஒரு அயோக்கியனை லவ் பண்றேன்னு சொல்லிட்டு வந்து நின்னா.. அவளை கண்டிக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு..!! அவ உன்னைல லவ் பண்றேன்னு சொல்றா..? என்ன சொல்லி என் பொண்ணை கண்டிக்க சொல்ற அசோக்கு..?? அவளை எதுத்து பேசுறதுக்கு எனக்கு ஏதாவது பாயிண்ட்டு சொல்லு பாப்போம்..? இல்ல.. திருத்துற அளவுக்கு என் பொண்ணு என்ன தப்பு பண்ணிட்டான்னாவது சொல்லு..!!”

அவர் பேச பேச.. நான் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தேன். பன்னீரிடம் இருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வரும் என்று நான் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசக்கூட, எனக்கு நாவெழவில்லை. அதிர்ந்து போன முகத்துடன் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னுடைய அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினார்.

“என் பொண்ணுக்கு எவ்வளவு துணிச்சல்னு நேத்தே பாத்தேல..? அவ மனசை மாத்த முடியும்னுலாம் எனக்கு தோணலை அசோக்கு.. மாத்துறதுக்கும் நான் முயற்சி பண்ண போறதும் இல்ல.. முடிஞ்சா நீ உன் மனசை மாத்திக்கோ..!!”

தீர்க்கமாக சொன்ன பன்னீர், தீர்ந்து போன சிகரெட்டை காலில் போட்டு மிதித்து நசுக்கிவிட்டு, என் பதிலுக்கு கூட காத்திராமல் என்னை கடந்து சென்றார். நான் செயலிழந்தவனாய் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். அப்புறம் சிகரெட் நெருப்பு என் விரல்களை சுட.. சுய நினைவு வந்து வெடுக்கென அதை உதறினேன்..!!

2

எபிஸோட் – IV

ஏன் யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? ஏன் எல்லோருமே என் உணர்சிகளை சீண்டி விளையாடுகிறார்கள்..? காலம் பிரிக்கப் போவது தெரியாமல், கட்டிய மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்தது தவறா..? அந்த காதல் மனைவியை கோர விபத்தில் இழந்துவிட்டு, அவளுடைய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேனே.. அது தவறா..? இந்த ஜென்மத்தில்.. இதய வீட்டில்.. அவளுக்கு மட்டுமே இடம் என்று வாழ முடிவு செய்ததில் ஏதேனும் தவறு கண்பீர்களா..? இதில் எது எனது தவறு..?? ஆனால்.. மலர், பன்னீர்.. அந்த முகுந்த் முதற்கொண்டு.. என் மீதுதான் ஏதோ தவறு என்பது போலல்லவா பேசுகிறார்கள்..??

கயல் என்னை விட்டுச்சென்ற இந்த ஒரு வருட காலத்தில், அவளுடைய நினைவுகளில் நான் வாழ்ந்திருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. அவளை தவிர என் வாழ்வில் வேறொரு பெண்ணுக்கு இடமில்லை என்ற என் மனவுறுதியிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் என் மனவுறுதியை சற்றே ஆட்டம் காண வைத்திருக்கின்றன என்றே எனக்கு தோன்றிற்று. இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தேன். மலரிடம் பேச வேண்டும்..!!

அன்று மாலை ஆபீசில் இருந்து கிளம்பி பெசன்ட் நகர் பீச் சென்றேன். நிலவு வெளிச்சத்தில் கருநீலமாய் காட்சியளித்த கடலையே வெறித்து பார்த்தபடி, நெடு நேரம் அமர்ந்திருந்தேன். இருண்டுபோன கடற்கரை நோக்கி தவழ்ந்து வந்த வெள்ளி அலைகளையே, அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனதுக்குள்ளும் அந்த மாதிரி எண்ணற்ற குழப்ப அலைகள்..!! திரும்ப திரும்ப.. சுழன்று சுழன்று.. மோதி மோதி.. என் அமைதியை அபகரித்துக்கொண்ட குழப்ப அலைகள்..!!

அன்று இரவு வீடு திரும்ப மிகவும் தாமதாமாகி விட்டது. பதினோரு மணியை நெருங்கியிருந்தது. பன்னீரும் அபியும் தூங்கியிருந்தார்கள். மலர்தான் வந்து கதவு திறந்து விட்டாள். ஒருமாதிரி சலனமில்லாமல் என் கண்களையே கூர்மையாக பார்த்தாள். என்னால் நெடுநேரம் அவளுடைய பார்வையை தாங்க முடியவில்லை. கடந்து உள்ளே சென்றேன். என்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டேன். வேறு உடைக்கு மாறி, படுக்கையில் விழுந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கதவருகே மலரின் குரல்.

“சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்.. வாங்க..”

“எ..எனக்கு பசிக்கல..” நான் அவளை ஏறிட்டு மெல்லிய குரலில் சொன்னேன்.

“ஏன்..?”

“பசிக்கலன்னா விடேன்..” நாம் சலிப்பாய் சொல்ல, மலர் இப்போது சீறினாள்.

“இப்டிலாம் பண்ணாதீங்கத்தான்.. என் மேல எதுவும் கோவம்னா.. என்னை நாலு அறை அறைஞ்சிடுங்க..!!”

“எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல..”

“அப்புறம் சாப்பாட்டு மேல மட்டும் என்ன கோவம்..?”

“ப்ச்..!! பசிக்கல மலர்..”

“பொய் சொல்லாதீங்க.. காலைலயும் சாப்பிடலை.. மதியமும் சாப்பிடலைன்னு அப்பா சொன்னார்.. இப்பவும் பசியில்லைன்னா என்ன அர்த்தம்..??”

“சாப்பிட பிடிக்கலைன்னு அர்த்தம்..!! எ..எனக்கு.. எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு மலர்.. கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடுறியா..? ப்ளீஸ்..!!”

“ஓ..!! நான்தான் உங்க நிம்மதியைலாம் கெடுக்குறேன்ல..?”

“……………………..”

“சரி..!! இதையும் கேட்டுக்குங்க.. நானும் நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடலை.. நீங்க சாப்பிடுற வரைக்கும் நானும் சாப்பிடறதா இல்ல..!! இப்போ வந்தீங்கன்னா.. ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டு நம்ம விரதத்தை முடிச்சுக்கலாம்..!! அதுக்கப்புறம் நான் இங்க வந்து நின்னு.. உங்க நிம்மதியை கெடுக்க மாட்டேன்.. விடியிற வரை நல்லா தூங்குங்க..!!”

நான் அதற்கும் அமைதியாக இருக்க, மலர் இப்போது சற்றே கோபமாய் கத்தினாள்.

“நான் சொல்றதுக்கு பதில் கூட சொல்ல மாட்டீங்களா..?? அவ்ளோ கோவமா என் மேல..??? சரி..!! நான் டைனிங் டேபிள்ல வெயிட் பண்ணுறேன்.. உங்களுக்கு எப்போ சாப்பிடனும்னு தோணுதோ.. அப்போ வாங்க..!! நீங்க வர்ற வரைக்கும் நான் அந்த எடத்தை விட்டு அசைய மாட்டேன்..!!”

படபடவென சொன்ன மலர், என் பதிலுக்காக காத்திராமல் திரும்பி நடந்தாள். டைனிங் டேபிளை அடைந்து, சேரை இழுத்து போட்டு அமர்ந்தாள். முழங்கைகளை டேபிளில் ஊன்றி, இரண்டு கையாளும் தன் கன்னங்களை தாங்கி பிடித்துக் கொண்டாள். எதிரே இருந்த சுவரையே ஒருமாதிரி நிலை குத்திப் போன பார்வை பார்க்கலானாள்.

எனக்கு இப்போது நிஜமாகவே தலை வலி வரும் போல் ஆனது..!! ப்ச்..!! ஏன் இப்படி செய்கிறாள் இவள்..?? எவ்வளவு பிரியம் வைத்திருந்தேன் இவள் மேல்..?? எரிச்சலுற செய்கிறாளே இப்போது..?? அவள் சொன்ன மாதிரி, கன்னத்தை சேர்த்து நான்கு அறை விடலாமா என்று கூட தோன்றுகிறது..!! அப்படி என்ன கண்டு தொலைத்தாள் என்னிடம்.. இந்த அறிவு கெட்டவள்..??

3

நான் ஒரு நான்கைந்து நிமிடங்கள் பெட்ரூமில் இருந்தபடி, தூரத்தில் அமர்ந்திருந்த மலரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இம்மி கூட அசைவது மாதிரி தெரியவில்லை. அழுத்தக்காரி.. பிடிவாதக்காரி.. ராட்சசி..!! எனக்கு அதன் பிறகும் அமைதியாய் இருக்க பிடிக்கவில்லை. எரிச்சலாய் ஒரு பெருமூச்சு விட்டவாறே படுக்கையில் இருந்து எழுந்தேன். விறுவிறுவென நடந்து சென்று, மலருக்கு அருகில் கிடந்த சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

நான் சாப்பிட வந்தமர்ந்ததற்கு மலர் எந்த வித உணர்ச்சியுமே காட்டவில்லை. நான் நிச்சயமாய் வருவேன் என்று முன்கூட்டியே அவளுக்கு தெரியும் என்பது மாதிரிதான் நடந்து கொண்டாள். என் முகத்தை திரும்பி கூட பாராமலே எழுந்து கொண்டவள், ப்ளேட் எடுத்து எனக்கு முன்பாக வைத்தாள். ஆறிப் போன சாதத்தை அள்ளி ப்ளேட்டில் போட்டாள். ஆவி பறக்கும் சாம்பாரை மேலே ஊற்றினாள். அப்பளத்தை ஒரு சின்ன தட்டில் வைத்து, எனக்கு முன் தள்ளி விட்டாள்.

“நீ சாப்பிடலையா..??” நான் சாதத்தில் கை வைக்க போவதற்கு முன்பாக கேட்டேன்.

“நீங்க சாப்பிட்டப்புறம் சாப்பிடுறேன்..” அவள் இறுக்கமான குரலில் சொன்னாள்.

நான் இப்போது திரும்பி, அவளை ஒரு நம்பிக்கையில்லாத பார்வை பார்க்க, அவள் அந்தப் பார்வையின் அர்த்தத்தை பட்டென புரிந்து கொண்டாள். சலிப்பும் கிண்டலும் சரிவிகிதத்தில் கலந்த குரலில் சொன்னாள்.

“ப்ச்.. நான் ஒன்னும் உங்களை மாதிரி.. சின்னப்புள்ளத்தனமா அடம் புடிக்க மாட்டேன்..!! நீங்க சாப்பிடுங்க.. கண்டிப்பா நான் சாப்பிடுறேன்..!!”

அப்புறம் நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். ‘பசிக்கல.. சாப்பிட பிடிக்கல..’ என்று என் வாய்தான் வக்கனையாக சொன்னதே தவிர, வயிறு பசியில் காய்ந்து போய்தான் கிடந்தது. எதைத் தின்று ஏப்பம் விடலாம் என்ற எதிர்பார்ப்போடுதான் இருந்தது. கொஞ்ச நேரம் வெட்கத்தையும், வீராப்பையும் மறந்து, வேக வேகமாய் சாப்பாட்டை அள்ளி விழுங்கினேன். மலரின் கைமணம், பசி இல்லாதவனுக்கும் கூட பசியை தூண்டிவிடும்..!! நானோ அகோர பசியில் இருந்தேன்.. எப்படி சாப்பிட்டிருப்பேன் என்று எண்ணிப் பாருங்கள்..!! பாதி சாதம் காலியான போதுதான், எதேச்சையாக திரும்பி மலரை பார்த்தேன். சற்றே அதிர்ந்து போனேன்.

Comments

Scroll To Top