மலரே என்னிடம் மயங்காதே – 16

(malarae ennidam mayangathae )

Raja 2014-02-26 Comments

“ம..மலர்.. எ..என்ன சொல்ற நீ..?”

“ஆமாத்தான்..!! நீங்க எங்கயும் போக வேணாம்.. இங்கயே இருங்க..!! நா..நான் போயிடுறேன்..!!”

3

“ப்ச்.. அறிவில்லாம பேசாத மலர்..!! நீ எங்கயாவது போயிடனும்ன்றதுக்காக.. நான் அன்னைக்கு அப்படி பேசலை..!!”

“ஐயோ.. நான் அப்படிலாம் நெனைக்கலை..!! யார் போனா என்ன.. நாம ஒண்ணா இருக்கக் கூடாது.. அவ்வளவுதான..?”

“அதுக்காக..?? நீ போறேன்னு சொல்றதை.. என்னால ஒத்துக்க முடியாது மலர்.. நீ தப்பா முடிவேடுத்திருக்கேன்னு எனக்கு தோணுது..!!”

“இல்லைத்தான்.. எனக்கு இதுதான் சரின்னு படுது..!! என்னாலதான உங்களுக்கு பிரச்னை.. நான் ஒதுங்கி போறதுதான் சரி..!!”

“பிரச்னைக்கு நீ மட்டும் காரணம் இல்ல மலர்.. நானுந்தான்..!!”

“நீங்க என்ன பண்ணுனீங்க..? அக்காவோட நினைவுலேயே நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்தீங்க.. நான்தான் அந்த நிம்மதியை கெடுத்திட்டேன்..!! உங்க மனசுல தேவையில்லாத சலனம் உருவாக காரணமாகி.. ‘எல்லாத்தையும் விட்டுட்டு எங்கயவாது போயிடுறேன்’னு நீங்க புலம்புற அளவுக்கு.. உங்களை கொண்டுவந்து விட்டுட்டேன்..!! போதும்த்தான்.. என்னால நீங்க பட்ட கஷ்டம்லாம் போதும்.. இனிமேலும் கஷ்டப்பட வேணாம்..!! நான் போயிடுறேன்..!! நீங்க இங்கயே.. எப்பவும் போல.. அப்பாவோடவும், அபியோடவும்.. நிம்மதியா இருங்க..!!”

அவள் படபடவென பேசி முடிக்க, நான் கொஞ்ச நேரம் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்புறம் என் முகத்தை வேறுபக்கமாக திருப்பிக்கொண்டு, சற்றே எரிச்சலும், சலிப்புமாய் கேட்டேன்.

“ம்ம்ம்… முடிவே பண்ணிட்ட போல..?”

“ஆமாம்..!!”

“உன்னோட முடிவு பன்னீருக்கு தெரியுமா..?”

“ம்ம்.. நேத்துதான் சொன்னேன்..!! மொதல்ல திட்டுனாரு.. இதுலாம் சரியா வராதுன்னு சொன்னாரு..!! அப்புறம் நான் பேசி சம்மதிக்க வச்சுட்டேன்..!!”

“ஓ.. அவரும் சம்மதிச்சாச்சா..? ம்ம்ம்… நல்லது..!! அப்போ.. நீ போறதுக்கு இதுதான் காரணமா..?? நான் கஷ்டப்படக் கூடாதுன்னுதான் இந்த முடிவா..?”

“ஆமாம்..!! அதில்லாம..” அவள் சற்றே இழுக்க,

“ம்ம்ம்.. சொல்லு..” நான் அவளை சொல்ல தூண்டினேன்.

“அபிக்கு என்னை விட நீங்க ரொம்ப முக்கியம்த்தான்..!! அவன் படிச்சு பெரிய ஆளா வரணும்னா.. நீங்க எப்போவும் அவன்கூட இருக்கணும்..!! என்னால நீங்க ரெண்டு பேரும் பிரிய வேணாம்.. அப்பாவையும் பையனையும் பிரிச்ச பாவம் எனக்கு வேணாம்..!!”

“ஓஹோ..?? அப்பாவையும், பொண்ணையும் பிரிச்ச பாவம் மட்டும் எனக்கு வந்தா பரவாலையா..? ஐ மீன்.. உன்னையும் பன்னீரையும் பிரிக்கிற பாவம்..??”

“அப்பாவுக்கு என்னை விட உங்களைத்தான் ரொம்ப பிடிக்கும்.. நீங்க பிரிஞ்சாத்தான் அது பாவம் ஆகும்.. அந்த பாவமும் எனக்குத்தான் வந்து சேரும்..!! அதுவுமில்லாம.. பொண்ணா பொறக்குற எல்லாருமே.. ஒருநாள் அப்பாவை பிரிஞ்சுதானே ஆகணும்..? அக்காவுக்கு கிடைச்ச மாதிரி ஒரு அதிர்ஷ்டம் எல்லாருக்கும் கிடைக்குமா..??”

சொல்லும்போதே அவளுடைய குரலில் ஒருவித ஏக்கம் எட்டிப் பார்த்ததை என்னால் உணர முடிந்தது. அதே நேரம் அவளுடைய முடிவில் அவள் உறுதியாக இருப்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. எல்லாவற்றிகும் இவள் பதில் வைத்திருக்கிறாள் என்றும் தோன்றியது. இன்னும் என்ன சொல்லி இவளை தடுத்து நிறுத்துவது என்று யோசித்தேன். அப்புறம் சற்றே தயங்கி தயங்கித்தான் அந்தக்கேள்வியை கேட்டேன்.

“நீ.. நீ இல்லாம.. அ..அபியை யாரு பாத்துப்பா..?”

“ஷ்யாமோட அம்மாட்ட பேசினேன்.. என் பிரச்னையை சொன்னேன்.. அபியை பாத்துக்க அவங்க சந்தோஷமா ஒத்துக்கிட்டாங்க..!! உங்களுக்கே தெரியும்.. அவங்க ரொம்ப நல்லவங்க..!! அபியை அவங்க நல்லா பாத்துப்பாங்கத்தான்.. அபி அவங்ககிட்ட நல்லபடியா வளருவான்..!!”

“அபியைப் பிரிஞ்சி நீ இருந்துடுவியா..?”

நான் அவரமாய் எறிந்த இந்தக்கேள்விக்கு, உடனடியாய் பதில் சொல்ல மலர் சற்று திணறினாள். பின்பு ஒருவாறு அந்த தடுமாற்றத்தை சமாளித்துக் கொண்டு சொன்னாள்.

“க..கஷ்டந்தான்.. ஆனா.. வே..வேற வழி இல்லையே..? இருந்துதான ஆகணும்..? சமாளிச்சுப்பேன்..!!”

மலர் எடுத்திருக்கும் இந்த முடிவில் எனக்கு சம்மதம் இல்லை. ஆனால் என்னால் எதிர்வாதம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாமே திட்டமிட்டு செய்திருக்கிறாள். இனி நான் என்ன சொன்னாலும் அவள் கேட்கப் போவதில்லை என்று தோன்றியது. அவளுடைய முகத்தையே கொஞ்ச நேரம் இயலாமையுடன் பார்த்தேன். அப்புறம் நீண்டதாய் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்தினேன். சாவி திருகி காரை ஸ்டார்ட் செய்தேன். சாலையில் செலுத்திக் கொண்டே, மெல்லிய குரலில் கேட்டேன்.

“ட்ரெயின் என்னைக்கு புக் பண்ணிருக்குற..?”

“நெக்ஸ்ட் தர்ஸ்டே..!!”

– தொடரும்

மலரே என்னிடம் மயங்காதே – 16

What did you think of this story??

Comments

Scroll To Top