சீக்கிரம் மெனோபாஸ்
(Tamil Hot Stories - Sikiram Menopause)
Tamil Hot Stories – பெண்களுக்கு 45 வயதிற்குமேல் மெனொபாஸ் வருவதுதான் அவர்களின் உடல்நலத்திற்கு ஏற்றது. அதற்கு முன்னதாக மெனோபாஸ் வருவது இதயநோய், பக்கவாத நோய்க்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
அமெரிக்காவில் இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் 2,509 பெண்கள் பங்கேற்றனர். இதில் 693 பேர் 46 வயதிற்கு முன்னபாகவே மெனோபாஸ் காலத்தை எட்டியவர்கள். அவர்களின் உடல் எடை அதிகம் காணப்பட்டது. நீரிழிவு நோயினாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் பிஎம்ஐ சராசரி அளவை விட அதிகம் காணப்பட்டது. சீக்கிரமே மெனோபாஸ் பருவத்தை அடையும் ஐரோப்பா, ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஆசியாவைச் சேர்ந்த பெண்களுக்கு தாமதமாக மெனோபாஸ் பருவத்தை அடைபவர்களை விட இதயநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாரடைப்பு, இதயநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ குறிப்பேடுகளை ஆய்வு செய்ததின் மூலம் இந்த உண்மை தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு ‘தி நார்த் அமெரிக்கன் மெனோபாஸ் சொசைட்டி’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. Menopause Tamil Hot Stories
What did you think of this story??
Comments