ஆண்மை தவறேல் – பகுதி 12
(Tamil Kamakathaikal - Aanmai Thavarael 13)
இதழில் ஒரு குறும்பு சிரிப்புடன் சொன்னவன், பர்சில் இருந்து ஒரு நூறு ரூபாயை எடுத்து, பில் புக்குக்குள் செருகினான். பாக்கெட்டில் இருந்த குளிர்கண்ணாடியை எடுத்து மீண்டும் கண்களுக்கு கொடுத்தான். திரும்பி ஸ்டைலாக நடந்து சென்றான். சென்று அந்த ரெஸ்டாரண்டை விட்டு வெளியேறினான். அவன் போவதையே நந்தினி வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
அத்தியாயம் 10
நந்தினி ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தபோது, ரிசப்ஷனிலேயே சூசை தென்பட்டார். இவளை பார்த்ததும் ஸ்னேஹமாய் புன்னகைத்தார். நேற்று காலை அவரை பார்த்தபிறகு மாலை ஒருமுறை அவரை சென்று நந்தினி பார்த்தாள். அப்போது அவருடைய மனைவியின் உடல்நிலை ஓரளவு சீராகி நலமாயிருந்தாள். எந்த நேரமும் பிரசவ வலி வரலாம் என்ற நிலையில் மருத்துவர்களின் தீவிர கவனிப்பில் இருந்தாள்.
ஒரு மணி நேரம் நந்தினி சூசைக்காக செலவழித்திருப்பாள். மருந்து வாங்குவதற்காக பார்மசிக்கு அழைந்தாள். ‘இவங்க கூட பொம்பளைங்க யாரும் வரலையா..?’ என்று நர்ஸ் கேட்டபோது அவசரமாக உள்ளே ஓடினாள். மருத்துவமனையின் விதிகள், செயல்பாடுகள், வழக்கங்கள் பற்றி சூசைக்கு பொறுமையாக சொல்லிக் கொடுத்தாள். முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவருக்காக அவ்வளவு உதவியாகவும், ஆறுதலாகவும் இருந்த நந்தினியை, சூசைக்கு மிகவும் பிடித்துப் போனது. அதனால்தான் இப்போது அவளை பார்த்ததும், புன்னகையுடன் அவளை நெருங்கினார்.
“உன்னைத்தான் பாப்பா தேடிட்டு இருந்தேன்.. ஒருவேளை டிஸ்சார்ஜ் ஆகி போயிட்டீங்களோன்னு நெனச்சேன்..”
“இல்லங்க.. மூணு மணிக்குத்தான் டிஸ்சார்ஜ் னு சொல்லிருக்காங்க..!! அப்புறம்.. உங்க வொய்ஃப் இப்போ எப்படி இருக்காங்க..?”
“நல்லா இருக்கா பாப்பா..!! காலைல அஞ்சு மணிக்கு சுகப்பிரசவம் ஆகிடுச்சு..!!” அவர் சந்தோஷமாக சொல்ல, அவருடைய சந்தோஷம் இப்போது நந்தினியையும் தொற்றிக் கொண்டது.
“வாவ்.. என்ன கொழந்தை..?”
“பொண்ணு..!!” சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.
“ஹையோ.. அப்போ உங்க வொய்ஃபுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்..”
“ஆமாம் பாப்பா..!! அவ.. என் சம்சாரம்.. உன்னை பாக்கனும்னு ரொம்ப பிரியப்படுறா..”
“அப்படியா..? கண்டிப்பா.. எனக்கும் குட்டிப்பொண்ணை பாக்கணும் போல இருக்கு.. வாங்க..”
இருவரும் லேபர் வார்ட் நோக்கி நடந்தார்கள். அதிகாலையில் குழந்தை பிறந்த அந்த தருணங்கள் பற்றி சூசை மிகவும் சந்தோஷமாக சொல்லிக் கொண்டு வந்தார். நந்தினியும் கண்களில் ஆவல் மின்ன, அந்த தருணங்களை ஆர்வமாக கேட்டுக்கொண்டாள். அறைக்குள் அவர்கள் நுழைந்ததுமே
“வாம்மா.. உள்ள வா..” என்று மரியம் புன்னகையுடன் வரவேற்றாள்.
“இப்போ உங்களுக்கு எப்படி இருக்கு..?”
“இப்போ தேவலாம்மா.. பட்ட கஷ்டம் எல்லாம் இந்த பிஞ்சு முகத்தை பாத்ததும் பறந்து போச்சும்மா..”
சொல்லிக்கொண்டே மரியம் கையில் இருந்த குழந்தையை நந்தினியிடம் தூக்கி கொடுக்க அவளும் கவனமாக வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்டாள். கண்களை இறுக்கி மூடிக்கொண்டு, கை கால்களை மட்டும் ஆட்டிக்கொண்டு கிடக்கும் அந்த குழந்தையின் அழகை நந்தினி மிக ஆசையாக ரசித்தாள். பட்டு மாதிரி மிருதுவாக இருந்த அந்த பிஞ்சின் உள்ளங்கால்களுக்கு முத்தமிட்டாள்.
“நீங்க பேசிட்டு இருங்கம்மா.. நான் மருந்துக்கடை வரை போயிட்டு வர்றேன்..”
சூசை சொல்லிவிட்டு திரும்பி அறைக்கதவை நோக்கி நடந்தார். அவர் போவதையே பார்த்துக் கொண்டிருந்த மரியம், இப்போது மிக இரக்கமான குரலில் சொன்னாள்.
“பாவம்.. என் புருஷனைத்தான் ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்..”
“ஐயோ.. ஏன்மா அப்படி சொல்றீங்க.. உங்களுக்கு ஒரு கஷ்டம்னா அவர் எப்படி சும்மா இருக்க முடியும்..?”
“ம்ம்.. ஆனா கொழந்தை பொறந்தது தெரிஞ்சதும் அவர் மொகத்துல சந்தோஷத்தை பாக்கணுமே..? பையன் வேணும் பையன் வேணும்னு சொல்லிட்டு கெடந்தார்.. இப்போ இந்த குட்டியை என் பொண்ணு என் பொண்ணுன்னு கொஞ்சுறாரு..”
“ம்ம்ம்..” நந்தினி புன்னகைத்தாள்.
“ஆனா.. இந்தக்குட்டியும் அப்படியே அவ அப்பாவை உரிச்சு வச்ச மாதிரி பொறந்திருக்கு பாரேன்..” மரியம் முகத்தில் இப்போது அப்படி ஒரு பெருமிதம்.
“ம்ம்.. ஆமாம்.. கண்ணு, மூக்குலாம் அவர் மாதிரியேதான்..” நந்தினி சொல்லிக்கொண்டிருக்க,
“உனக்கு எப்போமா கல்யாணம்..?” மரியம் திடீரென கேட்டாள்.
“பா..பாத்துட்டு இருக்காங்க..”
“அப்படியா..?? அப்போ கூடிய சீக்கிரம் ஒரு கல்யாண சாப்பாடு இருக்கு..??”
“ஆ..ஆமாம்..”
“கல்யாணத்துக்கு எங்களை எல்லாம் கூப்பிடுவல..?”
“கண்டிப்பா..” நந்தினி ஒருமாதிரி சுரத்தற்ற குரலில் சொன்னாள்.
“கவலைப்படாத தாயி.. உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா நடக்கும்..!! என் புருஷன் மாதிரியே உனக்கும் ஒரு நல்ல புருஷன் அமைஞ்சு.. புள்ள குட்டின்னு நீ எந்த குறையும் இல்லாம சந்தோஷமா இருப்ப..!!”
மரியம் மலர்ந்த முகத்துடன் மனதார வாழ்த்த, நந்தினி ஒருமாதிரி விரக்தியாக சிரித்தாள்.
நந்தினி அறைக்கு திரும்பியதும், அசோக்குடனான சந்திப்பு பற்றி அவள் அம்மா கேட்டாள். ‘சும்மா.. சாதாரணமாத்தான் பேசிட்டு இருந்தோம்..’ என்று நந்தினி சமாளித்தாள். வேறு எதுவும் சொல்லவில்லை.
அன்று பிற்பகல் அமுதாவுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தார்கள். அவர்களை வீட்டில் கொண்டு விட காருடன் ராமண்ணா ஹாஸ்பிட்டலுக்கே வந்திருந்தார். நந்தினியும் அவள் அம்மாவும் காரின் பின்பக்கம் ஏறிக்கொண்டார்கள். முன்பக்கம் ஏறிக்கொண்ட வந்தனாவோ, வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், ராமண்ணாவிடம் பேச்சுக்கொடுத்தாள்.
“நீங்க.. அந்த கௌரம்மாவோட ஹஸ்பன்ட்தான..?”
“ஆமாம்மா..”
“உங்களுக்கு சொந்த ஊர் சென்னைதானா..?”
“இல்லம்மா.. எங்களுக்கு ஆந்த்ரா.. சித்தூர் பக்கத்துல பலமனேர்..!!”
“ஓ..!! எத்தனை வருஷமா அசோக் அத்தான்கிட்ட நீங்க வேலை பாக்குறீங்க..?”
அதற்குள் வந்தனா அசோக்கை அத்தான் என்று உரிமையாக அழைத்தது நந்தினிக்கு சற்று ஆச்சரியத்தையும், சற்று எரிச்சலையும் வரவழைத்தது. அவள் பின்னால் இருந்து முறைத்தது வந்தனாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ராமண்ணா வந்தனாவின் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு வந்தார்.
“அசோக் தம்பிக்கு அஞ்சு வயசாறப்போல இருந்து ஐயா கூட இருக்கேன்மா..”
“ஹையோ.. அப்போ இருபது வருஷத்துக்கு மேல இங்க வேலை பாக்குறீங்களா..?”
“ஆமாம்மா.. இருபத்திரெண்டு வருஷமாச்சு..!! இந்த இருபத்திரெண்டு வருஷத்துல.. அவங்க அம்பாஸடர், காண்டஸா, ஆல்ட்டோ, இப்போ ஐ-டொன்ட்டின்னு நெறைய கார் மாத்திட்டாங்க.. ஆனா கார் ஓட்டுற ஆளு அதேதான்..!!”
“ம்ம்ம்.. இப்படி இருபத்திரெண்டு வருஷமா.. இந்த வளையத்தை புடிச்சு இப்படியும் அப்படியும் ஆட்டிட்டு இருக்கீங்களே.. உங்களுக்கு போரடிக்கலையா..?” வந்தனா ஸ்டியரிங்கை கைகாட்டி சொல்ல, ராமண்ணா மெலிதாக சிரித்தார்.
“ஹாஹா.. போரடிக்கத்தான் செய்யுது.. என்ன பண்ணலாம்..?”
“வேற எங்கயாவது போய்.. வேற ஏதாவது வேலை பாக்கலாம்ல..?”
“உனக்கு போரடிச்சா.. உன் அம்மா, அக்காவை விட்டுட்டு வேற எங்கயாவது போயிடுவியாம்மா..?”
“எ..என்ன சொல்றீங்க நீங்க..?”
“இது என் குடும்பம்மா.. இதை விட்டுட்டு நான் எங்க போவேன்..?”
“ம்ம்.. முதலாளிக்கு ரொம்ப விசுவாசமாத்தான் இருக்கீங்க.. உங்களை எனக்கு புடிச்சிருக்கு..!! அவங்களும் அந்த மாதிரி உங்ககிட்ட நடந்துக்கிட்டா சரிதான்..!!”
“என்னம்மா இப்படி சொல்லிட்ட.. பெரிய ஐயாவும் சரி.. அசோக் தம்பியும் சரி.. என்னை ஒரு வேலைக்காரன் மாதிரி நடத்துறது இல்ல.. என்னையும் அவங்க குடும்பத்துல ஒருத்தராத்தான் நெனைப்பாங்க..!!”
“நெஜமாவா..??” வந்தனாவின் குரலில் ஒருவித நம்பிக்கையின்மை.
“ஆமாம்மா.. நான் சும்மா பேச்சுக்கு சொல்லலை..!! நான் ஒரு விஷயம் சொல்லட்டா..?”
“என்ன..?”
“உன் அப்பா இறந்த மூணாவது நாளு.. நானும் ஐயாவும் உங்க வீட்டுக்கு வந்திருந்தோமே..?”
“ஆமாம்..”
“உன் அக்காவை மருமகளா ஆக்கிக்கனும்னு ஐயா அன்னைக்குத்தான் முடிவு பண்ணுனாரு..!! ‘இவதான் ராமு என் மருமக.. நீ என்ன நெனைக்கிற..?’ன்னு.. மொத மொதல்ல அந்த விஷயத்தை அவர் சொன்னதே என்கிட்டதான்..!! எந்த மொதலாளியாவது தன் குடும்ப விஷயம் பத்தி வேலைக்காரன்கிட்ட அபிப்ராயம் கேட்பாங்களா..?? இப்போ சொல்லு.. நான் சொன்னது சரிதான..?” Sunni Thadavum Tamil Kamakathaikal
– தொடரும்
What did you think of this story??
Comments