எமி – 3
(Tamil Hot Stories - Emi 3)
சொல்லிவிட்டு அவன் லேப்டாப்பை தூக்கிக் கொண்டு, அவனுடைய பெட்ரூமுக்கு நடந்தான். நான் சுத்தமாக குழம்பிப்போய் தலையை பிடித்துக் கொண்டேன்.
அடுத்த நாள் காலை.. ஆபீஸ் சென்றதுமே, முதல்வேலையாக என்னுடைய ஆஃப்ஷோர் மேனேஜருக்கு போன் செய்தேன்.
“ஹாய் அசோக்.. எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு..?”
“ஒன்னும் பிரச்னை இல்லை ஷிவா..!!”
“ம்ம்.. நெக்ஸ்ட் வீக் வர்றியா..?”
“அதுக்காகத்தான் இப்போ கால் பண்ணினேன் ஷிவா.. நான் உடனே இண்டியா திரும்பனும்..!!”
“உடனேவா..? எதுக்கு..?”
“ஃபேமிலில ஒரு எமர்ஜென்சி.. நான் உடனே வந்தா.. நல்லாருக்கும்னு ஃபீல் பண்றாங்க..!!”
“நீ வந்துட்டா.. அப்போ.. அங்க சப்போர்ட்..?”
“அதுதான் எல்லாம் ஸ்மூத்தா.. எந்தப் பிரச்னையும் இல்லாம போயிட்டு இருக்கே ஷிவா..? நான் சப்போர்ட்ன்ற பேர்ல.. தெண்டத்துக்குதான இங்க உக்காந்திருக்கேன்..? பிசினஸ் ஹெட்கிட்ட பேசு ஷிவா.. எமர்ஜென்சி சிச்சுவேஷன்னு சொல்லி.. எப்படியாவது நான் உடனே திரும்ப வர.. ஏற்பாடு பண்ணு..!!”
ஷிவா ‘ம்ம்ம்… ம்ம்ம்…’ என்றவாறு கொஞ்ச நேரம் யோசித்தான். அப்புறம்,
“ஓகே அசோக்.. நான் பேசுறேன்.. எனக்கு ஒருநாள் டைம் கொடு..!!”
“ம்ம்.. தேங்க்ஸ் ஷிவா..!!”
காஃபி, லஞ்ச் சாப்பிடுவதற்கு அன்று எமி என்னை அழைக்கவில்லை. நான் தனியாகத்தான் சென்று வந்தேன். மெசஞ்சரில் கூட எதுவும் பிங் செய்யவில்லை. ஒரே ஒருமுறை எதிரே பார்த்தபோது கூட, தலையை குனிந்துகொண்டே கடந்து சென்றுவிட்டாள். என்மீது ரொம்ப கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தது. நல்லதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.
அடுத்து இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு. ஆபீஸ் விடுமுறை. திங்கட்கிழமை அதிகாலை..
ரூமில் இருந்து மெயில் செக் செய்தபோதே, ஷிவாவின் மெயில் வந்திருந்தது. அதற்கு மறுநாளே நான் இண்டியா திரும்ப அனுமதி அளித்திருந்தான். ஓப்பன் டிக்கெட்டை என்டோர்ஸ் செய்துக்கொள்ள சொல்லியிருந்தான். எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. தேங்க்ஸ் சொல்லி ரிப்ளை பண்ணினேன்.
அன்று நான் ஆபீஸ் செல்லவில்லை. ஏர்-இண்டியா ஆபீஸ் சென்று டிக்கெட் என்டோர்ஸ் செய்து கொண்டேன். நாளை இரவு ஃப்ளைட் என்றார்கள். அங்கே சென்று வரவே மதியம் ஆகிவிட்டது. அப்புறம் ஷாப்பிங் சென்றேன். அம்மா, அப்பா, தங்கை எல்லாருக்கும் ஏதாவது வாங்கினேன்.
திரும்ப ரூமுக்கு வந்தபோது மாலை ஆறுமணி ஆகியிருந்தது. மூர்த்தி எனக்கு முன்பே வந்திருந்தான். நாளையே இண்டியா திரும்பும் விஷயத்தை அவனிடம் சொன்னேன். அவன் எதுவும் சொல்லவில்லை. அமைதியாக கேட்டுக் கொண்டான். Love Tamil Hot Stories
– தொடரும்
What did you think of this story??
Comments