எமி – 3

(Tamil Hot Stories - Emi 3)

Raja 2014-09-24 Comments

Tamil Hot Stories – சொல்லியே விட்டாள்..!! அவள் சொன்னபோது எனக்கு அழுகை வரும்போல் இருந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். இது நேரக்கூடாது என்பதற்காகத்தான் ஒருவாரமாக அவளை அவாய்ட் செய்துகொண்டே இருந்தேன். இன்று வசமாக சிக்கிக் கொண்டேன்.

“என்ன அசோக்.. எதுவுமே சொல்ல மாட்டேன்ற..?” எமி பொறுமை இல்லாமல் கேட்டாள்.

4

“எ..எனக்கு என்ன சொல்றதுன்னே தெ..தெரியலை எமி..”

“ஏதாவது சொல்லு.. என்னை புடிச்சிருக்கான்னு சொல்லு..”

“உன்னை புடிக்கலைன்னு ஏதாவது பைத்தியக்காரன்தான் சொல்லுவான்..!!”

நான் அப்படி சொன்னதும், இத்தனை நேரம் குழப்பமாய் இருந்த எமியின் முகம் பட்டென்று பிரகாசமானது. அவளுடைய வலது கையை நகர்த்தி, என் இடதுகை மீது வைத்துக் கொண்டாள். விரல்களை கோர்த்துக் கொண்டாள். லேசாக நெரித்தாள்.

“அப்புறம் என்ன அசோக்.. எனக்கு உன்னை புடிச்சிருக்கு.. உனக்கு என்னை புடிச்சிருக்கு.. அப்புறம் ஏன் தயங்குற..?”

அவள் ஆசையாக கேட்க, நான் என் கையை அவளுடைய கைக்குள் இருந்து உருவிக்கொண்டேன். மெல்லிய குரலில் சொன்னேன்.

“சொன்னா உனக்கு புரியாது எமி..”

“சொல்லு அசோக்.. புரிஞ்சுக்க ட்ரை பண்ணுறேன்..!!”

“எனக்கு வள்ளினு ஒரு முறைப்பொண்ணு இருக்குறா.. ஐ மீன்.. மாமா பொண்ணு..!! இண்டியால இந்தமாதிரி.. முறைப்பொண்ணை மேரேஜ் பண்ணிக்கிறது சகஜம்..!! எனக்கும் அவளுக்கும் போன வருஷமே என்கேஜ்மென்ட் முடிஞ்சது.. இன்னும் ரெண்டு மாசத்துல.. மேரேஜ் பிக்ஸ் பண்ணிருக்காங்க..!!”

“என்கேஜ்மென்ட்தான முடிஞ்சிருக்கு.. மேரேஜ் ஆனாத்தான ப்ராப்ளம்..? உங்க ஊர் பொண்ணுங்க.. தாலி, அது இதுன்னு.. செண்டிமெண்ட்..!!”

“உனக்கு எங்க கேஸ்ட் பத்தி தெரியாது எமி..!!”

“சொல்லிருக்க..!! என்ன பண்ணுவாங்க..?”

“நாம ரெண்டுபேரும் இப்போ அங்க போய்.. அந்த கல்யாணத்தை நிறுத்துங்க.. நாங்க ரெண்டு பேரும்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னா.. என் மாமா நம்மை அரிவாளை தூக்கிட்டு.. வெட்ட வருவாரு..!!”

“அரிவாள்..? வாட் இஸ் அரிவாள்..?”

“யூ டோன்ட் க்னோ.. இட்ஸ்.. இட்ஸ் எ டெட்லி வெப்பன்..!! நம்மை.. கொன்னாலும் கொன்னுருவாங்க எமி..!!”

“அசோக்.. அங்கே போகாமலேயே.. எதுவும் பேசாமாலேயே.. நீயா ஏன் எல்லாத்தையும் கற்பனை பண்ற..? நாம போய்த்தான் பார்ப்போமே.. போய் அவங்க முன்னாடி நின்னு.. கெஞ்சிப் பார்ப்போம்..!! நீ எவ்வளவு நல்லவனா இருக்குற..? அவங்க உன்னை பெத்தவங்க.. உன் ரிலேட்டிவ்ஸ்..!! அவங்களுக்கு அந்த நல்ல உள்ளம் இல்லாமா போகுமா..? போய் பாக்கலாம் அசோக்..!!”

உண்மையை சொல்லப்போனால் அவர்கள் இந்த விஷயத்திற்கு எந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. எமி சொன்னமாதிரி எல்லோருமே நல்லவர்கள்தான். அன்பானவர்கள்தான். இதுவரை என்னிடம் கோபமாக ஒருவார்த்தை கூட பேசியது கிடையாது. ஆனால் எல்லோருமே முரடர்கள். படிக்காதவர்கள். உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். எந்தநேரத்தில் எந்தமாதிரி பிஹேவ் பண்ணுவார்கள் என்பதே தெரியாது. இதில்.. எந்த பாவமும் அறியாத எமியை அவர்கள் முன்னால் கொண்டு சென்று நிறுத்தி..

“நோ எமி.. ஐ டோன்ட் வான்ட் டு புட் யுவர் லைஃப் இன் ரிஸ்க்..!!”

நான் சொன்னதும் எமி அமைதியானாள். கொஞ்ச நேரம் எதையோ தீவிரமாக யோசித்தாள். அப்புறம் என் பக்கமாக திரும்பி, அந்த கன்னத்தில் குழிவிழும் புன்னகையுடன் சொன்னாள்.

“ஸீ அசோக்.. நீ என் கூட இருக்குறதா இருந்தா.. எதுக்கு வேணா நான் ரெடி..!! என் உயிர் இண்டியால போனா.. அது எனக்கு சந்தோஷந்தான்..!! என்னை கூட்டிட்டு போ அசோக்..!!”

“ஸாரி எமி.. என்னால அது முடியாது..!!”

“தென்.. வாட்ஸ் யுவர் டெசிஷன்..?”

5

“எமி.. நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. இந்த லவ்.. இப்போதான் இது பெருசா தோணும்.. உயிரை கூட விடலாம்னு தோணும்..!! ஆனா.. லவ்வை விட லைஃப் ரொம்ப முக்கியம் எமி..!! ஆக்சுவலா எனக்கு பதிலா வேறொருத்தன் ஆன்சைட் வந்திருக்கணும்.. கடைசி நேரத்துல.. அவனுக்கு ஹெல்த் சரியில்லாம போய்.. நான் வர்ற மாதிரி ஆயிடுச்சு..!! நெனச்சு பாரு.. ஒருவேளை நான் யூ.எஸ் வராமலே போயிருந்தா..? நான் யார்னே உனக்கு தெரிஞ்சிருக்காது..!! இப்போவும் அப்படி நெனச்சுக்கோ எமி..!! என்னை மறந்துடு..!! நான் இண்டியா போறேன்..!! உனக்கு ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும்.. அப்புறம் என்னை மறக்க ஆரம்பிச்சுடுவ.. காலம் எல்லாத்தையும் மறக்கடிச்சுடும்.. ஒரு ரெண்டு வருஷத்துல.. அசோக்குனு ஒரு ஆள் இருந்ததையே நீ மறந்துடுவ..!! எவ்ரித்திங் வில் பி ஆல்ரைட்..!!”

“அசோக்..” அவள் கெஞ்சும் குரலில் ஆரம்பிக்க,

“ப்ளீஸ் எமி.. இதுக்கு மேல இதைப்பத்தி பேசாத..!!” என நான் பட்டென்று சொன்னேன்.

எமியின் முகம் வாடிப்போனது. எப்போதுமே அந்தமுகத்தில் தவழும், அந்த கள்ளம் கபடமற்ற புன்னகை காணாமல் போனது. கண்களை இடுக்கி, என்னையே முறைத்துக் கொண்டிருந்தாள். இத்தனை நாட்கள் பழகியதில், கோபம் கொப்பளிக்கும் அவளுடைய முகத்தை இப்போதுதான் பார்க்கிறேன். கஷ்டமாக இருந்தது. எமி அந்த கோபம் தெறிக்கும் குரலிலேயே கேட்டாள்.

“இதுதான் உன் முடிவா..?”

“எஸ்..!!”

“ஓகே..!! தேங்க்ஸ்..!!”

சொன்ன எமி பட்டென்று எழுந்துகொண்டாள். காஃபி கப்பை எடுத்துக் கொண்டு நகரப் போனவள், பின்பு அப்படியே நின்றாள். ஒரு கையை டேபிளில் ஊன்றி.. அவளுடைய முகத்தை எனக்கு அருகே கொண்டுவது.. என் கண்களை கூர்மையாக பார்த்தபடி.. ஆத்திரமாக ஆனால் அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.

“வாட் யு செட்.. எவ்ரித்திங் வில் பி ஆல்ரைட்..!! ம்ம்ம்…? நவ் லிஸன் டு திஸ்..!! நத்திங் வில் பி ஆல்ரைட் அசோக்..!! நத்திங் வில் பி ஆல்ரைட் ஃபார் மீ, வித்தவுட் யு..!! எத்தனை வருஷம் ஆனாலும் என்னால உன்னை மறக்க முடியாது.. அதே மாதிரி.. நீ இல்லாம இன்னொரு ஆம்பளை என் லைஃப்ல கெடையவே கெடையாது..!!”

படபடவென பொரிந்து தள்ளிவிட்டு, எமி விடுவிடுவென நடந்து சென்றாள். நான் திகைத்துப் போய் அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். நடந்து செல்கையிலேயே, கண்களில் வழிந்த நீரை அவள் துடைத்துக் கொள்வது தெரிந்தது. நான் ஆடிப்போயிருந்தேன். கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்புறம் எழுந்து ஆபீஸ் சென்றேன். அன்று முழுவதும் எந்தப்பக்கம் திரும்பினாலும், எமி அங்கே நிற்பது மாதிரியே இருந்தது.

அன்று நான் ரூமுக்கு திரும்பியபோது, மூர்த்தி சோபாவில் அமர்ந்து லேப்டாப்பை தட்டிக் கொண்டிருந்தான். நான் மெல்ல அவனுக்கு அருகே சென்று அமர, அவனோ கம்ப்யூட்டரில் இருந்து கவனத்தை விலக்காமலே, ‘ஹாய்..!!’ என்றான். நான் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, மெல்லிய குரலில் சொன்னேன்.

“எமி எங்கிட்ட ‘ஐ லவ் யூ..’சொல்லிட்டா மூர்த்தி..!!”

நான் சொன்னதும் அவன் ரொம்ப சந்தோஷப் பட்டான். முகமெல்லாம் மலர்ந்து போய், கையை நீட்டினான்.

“கைய கொடுங்க பாஸ்..!! கலக்கிட்டீங்க..!! ஹையோ…!! எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா பாஸ்..? நான்தான் ஆரம்பத்துல இருந்தே சொன்னேன்ல..? இது லவ்வுதான்னு.. நீங்கதான் நம்பலை..!! எப்போ ட்ரீட் தர்றீங்க..?” அவன் உற்சாகமாக பேசிக்கொண்டே போக, நான் இடைமறித்தேன்.

“நான் அந்த லவ்வை அக்ஸப்ட் பண்ணிக்கலை மூர்த்தி.. என்னை மறந்துடுன்னு சொல்லிட்டேன்..!!”

மூர்த்தி இப்போது பட்டென்று அதிர்ந்தான். நம்பமுடியாமல் என்னை பார்த்தான்.

“பாஸ்.. என்ன சொல்றீங்க நீங்க..? ஏன் அப்படி பண்ணுனீங்க..?”

“நான்தான் எங்க ஆளுங்களை பத்தி சொல்லிருக்கேன்ல மூர்த்தி..? அவங்க முன்னாடி இவளை கொண்டு போய் நிறுத்த சொல்றியா..?”

6

நான் சொன்னதும் மூர்த்தி என்னை ஒரு மாதிரியாக பார்த்தான். சற்றே கேலியான குரலில் கேட்டான்.

“உயிர் போயிருமேன்னு பயப்படுறீங்களா பாஸ்..?” இப்போது நான் எரிச்சலானேன்.

“மூர்த்தி.. நான் ஒன்னும் அந்த அளவுக்கு கோழை இல்லை..!! எனக்கு என்ன ஆனாலும் பரவால்லை.. எமிக்கு ஏதாவது ஒன்னுனா.. என்னால தாங்க முடியாது மூர்த்தி..!!”

“ஸோ.. என்ன பண்ணப் போறீங்க..?”

“இண்டியா போகப் போறேன்.. அடுத்த வாரம் இல்லை.. ரெண்டே நாள்ல..!! என் மேனேஜர்ட்ட பேசப் போறேன்..!!”

“அப்போ எமி..?”

“அவ கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்துடுவா மூர்த்தி.. நிம்மதியா இருப்பா..!!”

அப்புறம் மூர்த்தி கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை. அமைதியாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒருமாதிரி முறைக்கிறான் என்று தோன்றியது. அப்புறம் ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு சொன்னான்.

“பாருங்க பாஸ்.. நான் எமியை ரெண்டு மூணு தடவை பாத்ததை வச்சு சொல்றேன்..!! அவ மாதிரி ஒரு நல்ல பொண்ணு.. உலகத்துல எங்கே தேடுனாலும் கெடைக்க மாட்டா..!! அந்த மாதிரி ஒரு பொண்ணுக்காக என்னவேனா செய்யலாம் பாஸ்..!! உசுரு போனா மசுரே போச்சு..!! நீங்க பெரிய தப்பு பண்றீங்கன்னு தோணுது பாஸ்..!! உங்க எடத்துல நான் இருந்தா.. கண்டிப்பா எமியை கூட்டிட்டு போய்.. அவங்க முன்னாடி நிறுத்துவேன்..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உங்க இஷ்டம்..!! நான் ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சுடுங்க பாஸ்..!!”

Comments

Scroll To Top