மலரே என்னிடம் மயங்காதே – 9

(Tamil Hot Stories - Malarae Ennidam Mayangathae 9)

Raja 2014-02-18 Comments

Tamil Hot Stories – சொன்னவாறே பன்னீர் பேன்ட் பாக்கெட்டுக்குள் கைவிட்டு, காலையில் நான் அவருக்கு வாங்கி தந்த க்ளாஸை எடுத்து கண்களுக்கு மாட்டிக்கொண்டார். பில்லா அஜித் மாதிரி போஸ் கொடுத்தார். டி-ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், கேன்வாஸ் ஷூ, கூலிங் க்ளாஸ் என.. பார்ப்பதற்கே படு காமடியாக இருந்தார் பன்னீர்..!!

1

“ம்ம்ம்.. இப்போ எடு தம்பி..!!” என்றார் எகத்தாளமாக. இப்போது மலர் தன் அப்பாவை திட்டினாள்.

“ஐயோ.. உன் ரவுசு தாங்க முடியலைப்பா..!! இதுலாம் ஏன்த்தான் இவருக்கு வாங்கிக் கொடுத்தீங்க..?? ஆளும் அவரும்..!! கலாபவன் மணிக்கு காலேஜ் ஸ்டூடன்ட் கெட்டப் போட்டுவிட்ட மாதிரி இருக்கு..!!”

“விடு மலர்..!! ஆசைப்பட்டாரு.. வாங்கித்தந்தேன்..!! நல்லாத்தான இருக்கு.. போட்டுட்டு போறாரு விடு..!!”

“அப்டி சொல்லு அசோக்கு.. அவ மட்டும் இந்த மாதிரி ட்ரஸ் போட்டுக்கலாம்.. நான் போட்டுக்க கூடாதா..? பொறாமை புடிச்சவ..!!” என்று பன்னீர் எகிற, கேமரா பிடித்திருந்த ஆள் இப்போது எரிச்சலானான்.

“ஐயயையயையே..!! நீங்கள்லாம் ஃபேமிலி டூர் வந்தவங்களா..? இல்ல.. ஸ்கூல் டூர் வந்தவங்களா..? சின்னப்புள்ளைக மாதிரி அடிச்சுக்குறீங்க..? ச்சை..!! ஒழுங்கா போஸ் கொடுங்கப்பா.. என்னை கொலைகாரனாக்காதீங்க..!!”

‘ப்ச்..!! இப்போ சீக்கிரம் எடுத்து முடிச்சுட்டு வரல.. என்னைத்தான் நீங்க கொலைகாரியாக்கப் போறீங்க..!!’

அந்த புதுமனைவி முணுமுணுத்ததை என்னால் யூகிக்க முடிந்தது. ஒருவழியாக அந்த ஆள் க்ளிக் பண்ணி முடித்தான். கேமராவை எங்களிடம் நீட்டியவனுக்கு, நாங்கள் தேங்க்ஸ் சொல்லும் முன்பே, அவனுடைய மனைவி அவனது புஜத்தை பற்றி தரதரவென இழுத்து சென்றாள். அவ்வளவு நேரம் ஆக்கினாலும், அம்சமாக படம் எடுத்துக் கொடுத்திருந்தான் அந்த ஆள். LCD டிஸ்ப்ளேயிலேயே அது தெளிவாக தெரிந்தது. பன்னீர்தான் ரொம்ப நேரம் டிஸ்ப்ளேவை உற்று உற்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் திடீரென என்ன நினைத்தாரோ..

“சரி.. நீங்கள்லாம் இங்கயே இருங்க.. நான் அப்படியே ஒரு ரவுண்டு போயிட்டு வர்றேன்..” என்றார் உற்சாகமாக.

“எங்க போற பன்னீர்..?” நான் புரியாமல் கேட்டேன்.

“ஊட்டியோட அழகை.. ஒட்டுமொத்தமா இந்த கேமராக்குள்ள அடைச்சு கொண்டு வர்றேன் பாரு..” என்று கிளம்பிவிட்டார். அவர் அந்தப்பக்கம் சென்றதும், இந்தப்பக்கம் மலர்,

“அத்தான்.. அத்தான்.. எனக்கு ஒரு டென் ருபீஸ் கொடுங்களேன்..” என்றாள் அவசரமாக.

“எதுக்கு..??”

“எனக்கு முட்டை போண்டா சாப்பிடனும்..”

“முட்டை போண்டாவா..? அது எங்க விக்குது..??”

“அதோ.. அங்கே.. எல்லாருக்கும் சூடா போட்டு கொடுக்குறான்..!! ப்ளீஸ்த்தான்.. டென் ருபீஸ் ப்ளீஸ்..!!”

நான் புன்னகையுடன் பர்ஸ் திறந்து இருபது ரூபாயாக எடுத்துக் கொடுத்தேன்.

“ம்ம்ம்.. நல்லா நெறைய வாங்கி சாப்பிடு..”

“தேங்க்ஸ்த்தான்..!!”

என்று பணத்தை வாங்கிக் கொண்டு உற்சாகமாக கத்திய மலர், போண்டா கடை நோக்கி புள்ளி மான் மாதிரி துள்ளிகுதித்து ஓடினாள். சில வினாடிகள் அவளையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த நான், அப்புறம் திரும்பி கயலை பார்த்தேன். பார்த்ததும் சற்றே மிரண்டு போனேன். அவள் கண்களை இடுக்கி என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் சற்றே குழப்பமாய்,

“ஹேய் டார்லிங்.. என்னாச்சு.. ஏன் அப்படி பாக்குற..? உனக்கும் முட்டை போண்டா வேணுமா..?” என்றேன்.

“முட்டை போண்டாவா..?? மூஞ்சிலையே ரெண்டு குத்து குத்தலாமான்னு பாத்துட்டு இருக்கேன்..” என்றாள் அவள் எரிச்சலாக.

“ஒய்.. என்னடி ஆச்சு உனக்கு..? இவ்ளோ சூடா இருக்குற..?”

“பின்ன என்ன..?? எதுக்கு இதுங்களைலாம் இங்க இழுத்துட்டு வந்தீங்க..??”

“யாரை சொல்ற நீ.??”

“ம்ம்ஹ்ஹ்ம்ம்.. உங்க ஆசை மச்சினியையும்.. அருமை மாமனாரையும்..!!”

“ஏன்.. என்னாச்சு இப்போ..??”

“என்னாச்சா..?? அங்க பாருங்க ரெண்டையும்..!! ஒன்னு கேமராவை வச்சுக்கிட்டு.. மரம், செடியலாம் வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கு.. இன்னொன்னு முட்டை போண்டா சாப்பிட.. குட்டிச்சாத்தான் மாதிரி குதிச்சு குதிச்சு ஓடிட்டு இருக்கு..!! ஹனிமூன் வந்த இடத்துல இதுக ரெண்டும் அடிக்கிற லூட்டி தாங்க முடியலைப்பா..!!”

“ஏய்.. அப்டிலாம் சொல்லாதம்மா.. பாவம் அவங்க..”

2

“பாவமா..?? போங்கப்பா.. எனக்கு பயங்கர கடுப்பா வருது..!! எந்த கேனையனாவது இப்படி கும்பலா ஹனிமூனுக்கு வருவானா..??”

அவள் மறைமுகமாக என்னை கேனையன் என்கிறாள் என்று எனக்கு புரிந்தது. இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,

“ப்ச்.. அப்டிலாம் சொல்லாத கயல்..!! அவங்க மட்டும் வீட்டுல தனியா இருப்பாங்கல்ல..? அவங்களுக்கும் ஆசையா இருக்கும்ல..? அதான் கூட்டிட்டு வந்தேன்..!! அதில்லாம கார்லதான வர்றோம்..? பேக்சீட்லாம் சும்மா காலியாத்தான இருக்கும்..??”

“ம்க்கும்.. ரொம்பத்தான் அவங்க மேல அக்கறை..!! நல்லவேளை.. ஹோட்டல்ல ரூமாவது அவங்களுக்கு தனியா போட்டீங்களே..? அதுவும் இல்லன்னா.. ரொம்ப சுத்தம்..!!”

“ஹாஹ்ஹாஹ்ஹா..!!”

“ப்ச்.. சிரிக்காதீங்கப்பா..!! நானே எரிச்சல்ல இருக்கேன்..!! வந்ததுல இருந்து எங்கயுமே நாம தனியா போகலை.. எங்க போனாலும் இதுக ரெண்டும்.. ஒட்டுப்புல்லு மாதிரி கூடவே ஒட்டிக்குதுங்க..!! எனக்கு ஹனிமூன் வந்த மாதிரியே ஒரு ஃபீலிங் இல்ல.. அந்த ஆள் சொன்ன மாதிரி ஸ்கூல் டூர் வந்த மாதிரிதான் இருக்கு..!!”

சலிப்பாக சொன்ன என் மனைவியை பார்க்க, இப்போது எனக்கு பரிதாபமாக இருந்தது. அதே நேரம் எனது அதிர்ஷ்டத்தை எண்ணிப் பார்க்க, கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. திருமணம் ஆன இந்த இரண்டு வாரங்களுக்குள்ளாகவே கயல் என்னுடன் எவ்வளவு நெருங்கிவிட்டாள். ஏதோ பூர்வ ஜென்ம உறவு, இப்போது தொடர்வது போல.. எங்கிருந்து வந்தது.. உடனடியாய் எங்களுக்குள் இப்படி ஒரு அன்னியோன்யம்..?? நான் இப்போது குழைவான குரலில், சற்றே குறும்பாக கேட்டேன்.

“ஓ..!! மகாராணிக்கு இப்போ ஹனிமூன் வந்த ஃபீலிங் இல்லையா..?”

“ம்ஹூம்..!!” அவள் உதட்டை பிதுக்கினாள்.

“நேத்து நைட்டு நாலு மணி வரை தூங்காம.. ஆட்டம் போட்டோமே.. அப்போ..??” நான் அப்படி குறும்பாக கேட்டதுமே, குப்பென ஒரு வெட்க சாயத்தை கயலின் முகம் அப்பிக் கொண்டது.

“ச்சீய்..!!! போங்கப்பா.. கொஞ்சம் கூட வெக்கமே இல்ல உங்களுக்கு..!! யாராவது கேட்டுற போறாங்க..!!”

“யாராவது கேக்குறது இருக்கட்டும்.. நான் கேட்டதுக்கு மொதல்ல பதிலை சொல்லு..”

“ப்ச்.. உங்க கேள்வியே சரியில்ல..!!”

“ஏன்..?? என் கேள்வியில் என்ன பிழை..??”

“ஆமாம்.. அதுல என்ன ஸ்பெஷலா இருக்கு..? அதான் டெயிலி பண்றோமே..? இங்க வந்துதான் அதை பண்ணனுமா..? ஊர்ல வச்சே பண்ணிக்கலாமே..?”

“ம்ம்ம்.. அதுவும் கரெக்ட்தான்..!! வேற என்ன மிஸ்ஸிங்னு சொல்ற..?”

“நாம ரெண்டு பேரு மட்டும் தனியா எங்கயாவது போயிட்டு வரலாமே..? ப்ளீஸ்..!!”

“எங்க..?”

“சும்மா.. எங்கயாவது..!! ம்ம்ம்ம்.. அந்த கடைத்தெருலாம் ஒரு ரவுண்டு.. சுத்திட்டு வரலாமா..?” கயல் ஏக்கமாக கேட்க, நான் ஓரிரு வினாடிகள் யோசித்தேன். அப்புறம்,

“ம்ம்ம்ம்.. ஓகே.. டன்..!! போகலாம்..!!”

நான் அப்படி சொன்னதும், கயல் மகிழ்ந்து போனாள். ‘ஹை.. ஜாலி..’ என்று குழந்தை மாதிரி குதூகலித்தாள். முட்டை போண்டாவிற்கு வெயிட்டிங்கில் நின்ற மலரிடம், பன்னீரை கூட்டிக் கொண்டு ஹோட்டல் வந்து சேருமாறு சொல்லிவிட்டு, நானும் கயலும் தனியே உலவ சென்றோம்.

பொட்டானிகல் கார்டனுக்கு மிக அருகிலேயே இருந்த பெரிய சாலை அது..!! சாலையோர கடைகளை வேடிக்கை பார்த்தவாறே, பொறுமையாக நடையை போட்டோம். கொஞ்ச நேரம் கயலின் கைவிரல்களை கோர்த்துக் கொண்டு நடந்த நான், அப்புறம் அவள் தோள் மீது கை போட்டு, அவளை என்னோடு இறுக்கிக் கொண்டேன்.

“ஐயோ.. என்னப்பா இது..? கையை எடுங்க..!!” கயல் வெட்கத்தில் நெளிந்தாள்.

“கையை எடுக்கவா..?? நீதான இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி.. ஹனிமூன் வந்த ஃபீலிங்கே இல்லைன்னு சலிச்சுக்கிட்ட..? உனக்கு அந்த ஃபீலிங் கொஞ்சம் கொடுக்கலாம்னு ஒரு நல்ல எண்ணத்துலதான்..!! மத்தபடி.. எனக்காகலாம் ஒன்னும் இல்ல..!!”

“அதுலாம் ஒன்னும் வேணாம்.. யாராவது பாத்துறப் போறாங்க..”

“யாரு பாக்க போறா..?? ஊட்டில.. வேற வேலை இல்லாம.. இதெல்லாம் எவனாவது பாத்துட்டு திரிவானா..? அப்படியே பாத்தாலும் வயிறெரிஞ்சே செத்துடுவான் அவன்.. பாவம்..!!”

“எனக்கு கூச்சமா இருக்குப்பா.. ப்ளீஸ்..!!”

“எனக்கு குளிரா இருக்குதும்மா.. ப்ளீஸ்..!!” சொல்லிக்கொண்டே நான் அணைப்பை இன்னும் இறுக்கமாக்கினேன்.

3

“குளிருதா..?? அதுக்குத்தான் கெளம்புறப்போவே ஸ்வெட்டர் எடுத்து வைக்கவான்னு கேட்டேன்.. நீங்கதான் வேணாம்னு சொல்லிட்டீங்க..”

“குளிருக்கு கதகதப்பா.. அழகா அம்சமா.. அப்புறம் கைக்கு அடக்கமா.. என் பொண்டாட்டி இருக்குறப்போ.. எனக்கெதுக்கு ஸ்வெட்டர்..? அதுதான் வேணாம்னு சொன்னேன்..!!” நான் ரொமாண்டிக் டயலாக் விட, என் மனைவி சிணுங்கினாள்.

Comments

Scroll To Top