ஐ ஹேட் யூ பட் – 7

(Sex Stories In Tamil - I Hate You But 7)

Raja 2013-10-05 Comments

“எ..என்ன ஆச்சுடா….??”

ப்ரியாவின் குரல் காதில் விழுந்ததுமே அசோக் சுயநினைவுக்கு வந்தான். அவளைப் பிடித்திருந்த பிடியை பட்டென விட்டான். ப்ரியாவும் உடனே அவனிடமிருந்து சற்றே நகர்ந்து கொண்டாள். ஓரிரு வினாடிகள் என்ன சொல்வதென்று தடுமாறிய அசோக், உடனே சமாளித்துக்கொண்டு,

“பா..பாத்து ப்ரியா.. இன்னும் கொஞ்சம்னா கீ..கீழ விழுந்திருப்ப.. நல்லவேளை.. புடிச்சுட்டேன்..!!”

அசோக் அந்த சூழ்நிலையை அழகாக சமாளித்துவிட, ப்ரியாதான் புரியாமல் தலையை சொறிந்தாள்.

“கீ..கீழயா..?? நா..நான் எப்போ கீழ விழப் போனேன்..??”

“இ..இதோ.. இப்போ.. அப்படியே சர்ருன்னு.. ஸ்லிப் ஆகிட்டு போனியே.??”

“போடா லூசு.. நான் பால் ரிடர்ன் எடுகுறதுக்காக போனேன்..!!”

“ஓஹோ..?? போறது.. கொஞ்சம் பொறுமையா போகலாம்ல..?? நான் கீழ விழப்போறியோன்னு பயந்துட்டேன்..!!”

“ஹ்ம்ம்.. பொறுமையா போறதுக்கு இங்க என்ன கல்யாண ஊர்வலமா நடக்குது..??”

“சரி சரி.. ஏதோ தெரியாம பண்ணிட்டேன்.. ஸாரி..!!” அசோக் அவளை ஒரு திருட்டுப் பார்வை பார்த்தவாறே சொன்னான்.

“ப..பரவால.. விடு..!!” ப்ரியா இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாதவளாகவே சொன்னாள்.

அப்புறம் கொஞ்ச நேரம் இரண்டு பேரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் ஏறிட்டுப் பார்க்கவும் தயங்கியவாறு, அமைதியாக நின்றிருந்தார்கள். பிறகு ப்ரியா அந்த மௌனத்தை உடைக்கும் விதமாய், மெல்லிய குரலில் கேட்டாள்.

“இப்போ என்ன.. போதுமா இல்ல கண்டின்யூ பண்ணலாமா..??”

“க..கண்டின்யூ பண்ணலாம் ப்ரியா.. வா வா.. நாந்தான இப்போ சர்வீஸ்..??”

குரலை இயல்பாக மாற்றிக்கொள்ள முயற்சித்தவாறே, அசோக் குனிந்து ஓரமாய் கிடந்த பந்தை பொறுக்கிக் கொண்டான். சர்வீஸ் செய்யும் கட்டத்துக்குள் சென்று நின்று கொண்டான். ப்ரியாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறே, பந்தை தூக்கிப்போட்டு சுவற்றில் அடித்தான். சுவற்றில் பட்ட பந்து மீண்டும் இவர்களை நோக்கி பறந்து வர, ப்ரியா அதை அடிப்பதற்காக பாய்ந்தாள். ப்ரியாவின் நெருக்கம் ஏற்படுத்திய கிறக்கத்தில் இருந்து இன்னும் மீளாத அசோக், அவள் ஓடுகையில் அதிர்கிற அவளது அங்கங்களையே வெறித்தான்.

ப்ரியா பந்தை திருப்பி சுவற்றில் அடித்த பிறகும், அவனது பார்வை அவள் மீதிருந்து அகல்வதாய் இல்லை. சித்தமெங்கும் பித்தம் ஏறிப்போனவனாய் ‘பே’ என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். ‘ஹேய்.. பால்-டா..!!’ என்று ப்ரியா கத்தியது காதில் விழவில்லை. பறந்து வந்த பந்து இவன் கன்னத்தில் வந்து ‘சொத்..’தென்று ஒரு அடி போட்டதும்தான், சுரணை வந்து ‘ஆஆஆ..’ என்று கத்தினான்.

அத்தியாயம் 5

அப்புறம் வந்த சில நாட்கள்.. தினமும் மாலை அசோக்கும் ப்ரியாவும் கவிதாவை கழட்டிவிட்டு ஸ்குவாஷ் ஆடினார்கள். ‘ஒரே ஒரு கேம் கவிதா..’ என்று அவளிடம் சொல்வார்கள். ஒரு மணி நேரம் தாண்டியும் கெக்கபிக்க என கனைத்தபடியே விளையாடிக்கொண்டு இருப்பார்கள். இரண்டு நாட்கள் இவர்கள் கண்ணாடி அறைக்குள் விளையாடுவதையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்த கவிதா, மூன்றாம் நாள் ‘இல்ல ப்ரியா.. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.. நீங்க போயிட்டு வாங்க..’ என்று டீசண்டாக ஒதுங்கிக் கொண்டாள்.

மேலும் இரண்டு வாரங்கள் ஓடின.. ஃப்ரேம்வோர்க் டெலிவர் செய்யும் நாள் நெருங்கி கொண்டே இருந்தது. அசோக் தனக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த காம்பனன்ட் டிசைனை இரண்டு நாட்கள் முன்னதாகவே முடித்துவிட்டான். உடல்நிலை சரியில்லாமல் இரண்டு நாட்கள் லீவ் போட்டுவிட்ட ஹரியின் வேலையை எடுத்து செய்து கொண்டிருந்தான். ப்ரியா தனது வேலையை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். அவளுக்கு வந்து வாய்த்த காம்பனன்ட் காப்ளிகேட்டடாக அமைந்து போக, கஷ்டப்பட்டாள்.

அப்போது ஒரு நாள் மாலை.. அவர்கள் ஆபீஸ்.. நேத்ரா அவசரமும், பதட்டமுமாய் அசோக்கின் இடத்திற்கு வந்தாள். அவளுடைய குரலிலும் ஒருவித அவசரம்..!!

“ஹே அசோக்.. ஐ நீட் எ ஹெல்ப் ஃபரம் யூ..!!” என்றாள்.

“சொ..சொல்லு நேத்ரா..!!”

“உன் பைக்ல கொண்டு போய்.. என்னை ஹோசூர்ல ட்ராப் பண்ண முடியுமா..??”

“ஹோசுரா..?? ஹோசூர் எதுக்கு போற நீ..??”

“அது.. நாலு நாள் ஹாலிடே வருதுல..?? எங்க காலேஜ் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் ஒண்ணா சேர்ந்து கொடைக்கானல் ட்ரிப் போகலாம்னு ப்ளான் பண்ணிருந்தோம்.. இன்னைக்கு ஈவினிங் செவன் ஓ க்ளாக் ட்ரைன்..!! ஆக்சுவலா இன்னைக்கு சீக்கிரமே கெளம்பி மெஜஸ்டிக் போக நெனச்சிருந்தேன்.. லாஸ்ட் மொமன்ட்ல ‘அதை முடிச்சுட்டு போ’ன்னு இந்த ரவி பயங்கர டார்ச்சர் பண்ணிட்டான்.. அல்ரெடி இங்கயே செவன் ஆயிடுச்சு.. அதான் ஹோசூர் ஸ்டேஷன் போய் ட்ரெயினை புடிச்சிடலாம்னு..!! ப்ளீஸ் அசோக்.. ஹெல்ப் பண்ணுடா..!!”

“சரி பண்றேன்.. பட் ஒன் கண்டிஷன்..!!”

“என்ன..??”

“உன் ஃப்ரண்ட்ஸ்லாம் எனக்கு இன்ரொட்யூஸ் பண்ணி வைக்கணும்..!!” சொல்லிவிட்டு அசோக் கண்சிமிட்ட,

“அடச்சை.. ஜொள்ளு..!!” நேத்ரா முகத்தை சுளித்தாள்.

“அப்போ போ.. என்னால முடியாது..!!”

“சரி.. சரி..!! இன்ரொட்யூஸ் பண்ணி வைக்கிறேன்.. வந்து தொலை..!!”

அடுத்த பத்து நிமிடங்களில் அசோக்கும், நேத்ராவும் ஆபீசில் இருந்து பைக்கில் கிளம்பினார்கள். ஹோசூர் ரயில்வே ஸ்டேஷனை அடைந்தபோது மணி 7.45. அவர்கள் சென்று அரை மணி நேரம் கழித்துத்தான் ட்ரெயின் வந்தது. நேத்ராவின் ஃப்ரண்ட்ஸ் என்றதும் பத்து பதினைந்து கன்னடக்கிளிகள் வரப் போகின்றன என்று கனவில் இருந்தான் அசோக். ஆனால் வந்தது என்னவோ தடி தடியாய் நான்கைந்து பையன்களும், இரண்டே இரண்டு அல்ட்டாப்பு ராணிகளும்..!! அந்த அல்ட்டாப்பு ராணிகள் இவனை கண்டுகொள்ளாமல் நேத்ராவுடன் கன்னடத்தில் பேசின. தடியர்கள் விரோதியை பார்ப்பது போல இவனை முறைத்தனர்..!! நொந்து போனான்..!!

ஒரு வழியாய் நேத்ராவை வழி அனுப்பி வைத்தான். பசியெடுக்க ஆரம்பிக்கவே, ஹோசூர் அவுட்டோரிலேயே ஒரு ரெஸ்டாரன்டில் வண்டியை நிறுத்தி, வாணியம்பாடி பிரியாணி வாங்கி வயிற்றுக்குள் தள்ளினான். ‘ஆபீஸ் சென்று பேக் எடுத்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பிவிட வேண்டியதுதான்..’ என்ற எண்ணத்துடன் பெங்களூர் நோக்கி பைக்கை சீற விட்டான். Koothi Sex Stories In Tamil

– தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top